
“ஒரு காதலை காதலாகவே வைத்துக்கொள்ள தெரிந்த ஆணுக்கு பெண் என்பவள் ஏதும் செய்யாமலே கொட்டிக் கொடுப்பாள்..!! – எழுத்தாளர், கவிஞர் மதுரை சத்யா, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இல்லற வாழ்விலும் சரி காதல் வாழ்விலும் சரி லவ் வேறு ஆஸ்பிட்டாலட்டி ( கவனிப்பு) வேறு நம்ம கூட இருப்பவரை கவனித்தாலே அது காதல் என ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் எதிர்பார்ப்பது காதல் என்கிற ஒரு விசயத்தை. சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் எனக்கேட்டால், “பிரத்யேகம்”( Risk) தான்.

எல்லோருமே எல்லாரையும் கவனிக்கிறார்கள் “எனக்கென நீ தனிப்பட்டு என்ன செய்தாய்? எதை கொண்டு வந்தாய்? என்ன துன்புற்றாய்?” இதுதான் காதலுக்குள் இருக்கும் கேள்விகள்… சில ஆண்கள் இதற்கு விதண்டாவாதம் செய்வதுண்டு ” இவ கூட வாழ்றதே சாதனை.. ஏன் இவளுக செய்ய மாட்டாளுகளா?”
என்றெல்லாம் …
காலம்காலமாக ஒரு பெண்ணை அடையும் ஆண் ” உன்ன நல்லா பாத்துப்பேன்” என்ற வாக்குறுதி யோடு அவளின் கைபிடிக்கின்றனர்.. அந்த பெண் சலித்த நாளில்தான் இத்தகைய விதண்டவாதங்கள் தொடர்கின்றன ..
“ஒரு காதலை காதலாகவே வைத்துக்கொள்ள தெரிந்த ஆணுக்கு பெண் என்பவள் ஏதும் செய்யாமலே கொட்டிக்கொடுப்பாள்
தொகுப்பு:
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்
