காய்ந்த இலைகள், வாழை சருகு,காய்கறி கழிவுகள், சாணம்,வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தொழு உரம் தயாரிக்கும் முறை… காரைக்கால் பஜன் கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி…செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,

வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாணவர்கள் அபினேஷ், விஷால், ரஞ்சித்,ஞானசுந்தர், ரிஷிகுமார் ஆகியோர் காய்ந்த இலைகள், வாழை சருகு,காய்கறி கழிவுகள், சாணம்,வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தொழு உரம் தயாரிக்கும் முறை காரைக்கால் பஜன் கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கத்தரிப்புலம் கிராமத்தில் பிப்ரவரி 9 திங்கட்கிழமை அன்று விவசாய பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காரைக்கால் பஜன் கோவா வேளாண் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட நிரல் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். ஆனந்தகுமார் ஒருங்கிணைப்பில் ஊரக வேளாண் பணி அனுப்பவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாணவர்கள் அபினேஷ், விஷால், ரஞ்சித்,ஞானசுந்தர், ரிஷிகுமார் ஆகியோர் காய்ந்த இலைகள், வாழை சருகு,காய்கறி கழிவுகள், சாணம்,வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தொழு உரம் தயாரிக்கும் முறையினை விவசாயிகளுக்கு மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் பந்தல் முறை காய்கறிகளுக்கு கருவாடு,நாட்டு சர்க்கரை, தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி பழ ஈ போன்ற பூச்சிகளை விவசாய சூழலை மாசு படுத்தாமல் இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என்று விவசாய கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,

Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top