மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கேந்திர வித்யாலயா சங்கத்தான் தலைவர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும் வணக்கம்
கேந்திரிய வித்யாலயாக்களில் மத்திய அரசின் சட்டப்படி தமிழை பயிற்று மொழி மற்றும் பாடமொழி ஆக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக 12/02/2026 ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவை பந்தய சாலை காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்…
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழி மற்றும் பாட மொழியாக்குக !
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 29 (2)f படியும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 படியும் கோவையில் உள்ள மத்திய அரசு சார்பு கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும்
தமிழ்நாட்டில் கோவையில் உள்ள கேந்திரிய வித்யாலயாத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்று மொழியாக உள்ளது மேலும் 6,7,8 வகுப்புகளில் சமஸ்கிருதம் ஒரு கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கப்படுகிறது இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தேர்வு உண்டு
மேலும் 9 மற்றும் 10 வகுப்புகளில் ஆங்கிலம் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் மொழிப்பாடமாக உள்ளது
மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேவைப்பட்டால் நான்காவது மொழியாக தமிழ் கற்றுத் தரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஏற்கனவே மூன்று மொழிகளை கட்டாயமாக படிக்கும் நிலையில் இருக்கும் மாணவர்கள் நான்காவது மொழியை படிப்பது கடும் சுமையை ஏற்படுத்துவதாகும் இதனால் மாணவர்கள் பெரும்பாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது
கேந்திரிய வித்யாலயாவில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பதாலும் தற்காலிக பணியிடங்களும் பெரும்பாலும் நிரப்பப்படாத நிலையில் தமிழுக்கு தேர்வு கட்டாயம் இல்லாத நிலையில் ஏற்கனவே மூன்று மொழிகளை படிக்கின்ற சுமை இருக்கும் போது இந்த வாய்ப்பு கிடைத்தாலும் கூட தாய்மொழியில் குறைந்தபட்ச அறிவை கூட பெற இயலாது இது ஒரு கண்துடைப்பு மட்டுமே
தமிழ் படிக்காமலேயே இந்த பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்து வெளியேறிவிடலாம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் தாய்மொழி தமிழை படிக்காமலேயே வெளியேற முடியும் என்ற நிலை அடிப்படை உரிமைக்கு எதிரானது
இந்தியை தாய் மொழியாக கொண்ட மத்திய அரசு பணியாளர்களை தவிர தமிழை தாய்மொழியாக கொண்ட மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் மற்ற மொழிகளை தாய் மொழிகளாக கொண்ட மத்திய அரசு பணியாளர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியை ஒரு மொழிப்பாடமாக கூட படிக்க வைக்க இயலாத நிலை இந்த பள்ளிகளில் உள்ளது
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழி பாடத்தை விருப்பமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது
மத்திய அரசு பணியில் இருக்கும் பணியாளர்கள் இடமாறும்போது அவர்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திர வித்யாலயாக்களிலும் இந்தி மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக வைக்கப்பட்டுள்ளது என்றும் 6 முதல் 8 வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாய மொழிப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
கேந்திரிய வித்யாலயாக்களில் ஐந்து பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்
முதலில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மொத்த சேர்க்கையில் 25 சதவீதம் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் இவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மாணவர்கள்
Category 1 and 2
மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெற்றோர்களின் குழந்தைகள் ( தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அரசு பணியாளர்கள் குழந்தைகள் உட்பட )
Category 3,4,5
( முழுவதுமாக தமிழ்நாடு மாணவர்கள்)
மாநில அரசு மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் அனைத்து இதர பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா இணைய தளத்தில் எடுத்த புள்ளிவிவரங்களின்படி 2025-2026 ஆவது வருடத்தில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2282
Category 1&2 1279 மாணவர்கள் 56%
Category 2&3&5. 1003 மாணவர்கள் 44%
Category 2&3&5 அனைவரும் தமிழ்நாட்டு மாணவர்கள் Category 1&2 இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அரசு பணியாளர்களும் இருப்பதால் பெரும்பாலும் கேந்திரிய வித்யாலயாவில் 50 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் தமிழை தாய் மொழி கொண்ட தமிழ்நாட்டு மாணவர்களே ஆகும்
தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் அதிகமாக படிக்கின்ற நிலையிலும் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக கூட இல்லை இது அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது
2) ஒவ்வொரு வருடமும் கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து தங்களின் பணி மாறுதல் காரணமாக குழந்தைகளின் மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறியவர்களின் விவரம்
கல்வியாண்டு 2025-26 apr to 2026 Jan வரை 147 மாணவர்கள் 6.5%
கல்வி ஆண்டு 2024 ஏப்ரல் முதல் மார்ச் 20 25 வரை 142 மாணவர்கள் 6.2%
கேந்திரிய வித்யாலயாக்களில் பெற்றோர்களின் பணி மாற்றம் காரணமாக மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களின் சதவீதம் அதிகபட்சம் ஏழு சதவீதம்
ஆனால் 93 சதவீத மாணவர்கள் நிரந்தரமாக படிக்கக்கூடிய மாணவர்கள் இடம் மாறும் ஏழு சதவீத மாணவர்களை கருத்தில் கொண்டு 93 சதவீத மாணவர்களுக்கு அவர்களின் தாய் மொழி படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது
ஒவ்வொரு வகுப்பிற்கும் 4 பிரிவுகள் உண்டு ஒரு பிரிவு மட்டும் இடமாறும் மாணவர்களுக்காக வைத்துக்கொண்டு மீதி உள்ள மூன்று பிரிவு மாணவர்களுக்கு தாய்மொழி கல்வி கொடுப்பது நடைமுறை சாத்தியமானது எந்த பிரிவு வேண்டும் என்பதை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
கட்டாய கல்வி உரிமை சட்ட பிரிவு 29(2)f விதிமுறைகளின் படி நடைமுறை சாத்தியம் உள்ள வரை தாய்மொழி பயிற்றுமொழி ஆக கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது மேலும் மத்திய அரசின் தேசிய கல்வி 2020ன் படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழி வழி கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரியா வித்யாலயாக்களில் சமஸ்கிருதம் நடைமுறை சாத்தியம் உள்ளது எனில் தமிழும் நடைமுறை சாத்தியமே
அதனால் தமிழ்நாட்டில் கோவையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 29 (2)f பிரிவின்படி
எட்டாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட வேண்டும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 படியும் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதத்தை போல ஒரு மொழி பாடமாக தமிழை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்
V ஈஸ்வரன்
தலைவர்
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்
40(3) செங்கப்ப கோனார் வீதி
சுந்தராபுரம்
கோயம்புத்தூர் 641024
9965540417
