
டெல்லியில் போலீஸ்கார தந்தை–மகள் போராட்டம்…: தேசிய குழந்தை நல ஆணைய அலுவலகம் முன்பு பரபரப்பு…!
புதுடில்லி ஜனபத் மெட்ரோ நிலையம் அருகே அமைந்துள்ள தேசிய குழந்தை நல ஆணையம் முன்பு இன்று பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர் கோதண்டபாணி மற்றும் அவரது மகள் பிரதிக்ஷா இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை சுமார் 10 மணியளவில்,
தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த திரு கோதண்டபாணி அவர்கள்,
தன் மகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் கொடுமைக்கு நீதி கேட்டு
தேசிய குழந்தை நல ஆணையம் (NCPCR) அலுவலகத்தை அணுகினார்.
நேற்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும்
எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர்,
இன்று தனது மகள் பிரதிக்ஷாவுடன் இணைந்து
போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக,
பிஜேபி மற்றும் திமுக கட்சிகளின் கொடிகள் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தந்தை மற்றும் மகள் இருவரும் கைகளில் கை விலங்கு அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர், சூழ்நிலையை கருத்தில் கொண்டு
கொடி எரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.