தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணி புரியும் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி ஒட்டுநர்கள், ஊர்தி உதவியாளர்கள் பணியிடம் நிறுவனத்தின் மூலம் நிரப்ப மாற்று திறனாளிகள் நல ஆணையர் பிப்ரவரி 2 ம்தேதி சுற்றறிக்கைக்குஎதிர்ப்பு; பணியாளர்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை..!!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் நடமாடும் சிகிச்சை பிரிவுஊர்தி ஒட்டுநர்கள் (Mobile Van Drivers) மற்றும் ஊர்தி உதவியாளர்கள் (Mobile Van Helpers) மாவட்ட மகமை வெளிமகமை நிறுவனத்தின் மூலம் நிரப்பிட மாற்று திறனாளிகள் நல ஆணையர் 02-02-2026 அன்று சுற்றறிக்கை…

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நலன்கருதி பணியாளர் தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை…!!

செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,

Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க..

பிப்,22,2026
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் நேரடி பார்வையில் வைத்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
நல் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்


முன்னாள் முதல்வர் மூலம் 110 விதியில் அறிவிக்கப்பட்ட அரசானையை மாற்ற முயற்சிக்கும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலங்களில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் 110 விதியின் கீழ் வழங்கப்பட்டு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் இனசுழற்சி அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பட்டியல் பெறப்பட்டு
வட்டார போக்குவரத்து அலுவலரால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியற்றி வருகிறார்கள். தற்போது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தொகுப்பூதிய பணியாளர்களை மாவட்ட மகமை வெளிமகமை மூலம் நிரப்பிட சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதனால் 79 க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் குடும்பங்கள்
பாதிக்கபடுகிறது என்கிறார்கள் சங்கநிர்வாகிகள்..


மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட்டு பல ஆண்டுகளாக பணிபுரிந்த குடும்பங்கள் வாழ நல்ல முடிவு எடுக்குமாறும் கோரிக்கையாக தெரிவித்துள்ளார்கள்…

செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,

Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top