
தூக்கமில்லை.. மனவேதனையில் தவிக்கிறேன்.. தயவு செய்து நிலத்தை காப்பாத்தி கொடுங்க…!! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த நடிகை ஜெயசித்ரா கண்ணீர் கோரிக்கை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ பேரழகி, நடிப்பில் உச்சம்தொட்ட பல திறமையான நடிகைகளை நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி திறமைக்கும் அழகுக்கும் பெயர் போனவர் தான் நடிகை ஜெயசித்ரா. குறத்தி மகன் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினா அறிமுகமான இவர், சொல்லத்தான் நினைக்கிறேன், வெள்ளிக்கிழமை விரதம், இளமை ஊஞ்சலாடுகிறது, சினிமா பைத்தியம் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜெயசித்ரா: வயது மூப்புகாரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா தற்போது செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
அதில், ஒரு விண்ணப்பத்தை நேரடியாக முதல்வர் ஐயா அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தான் இந்த செய்தியாளர் சந்திப்பு என்றார். மகாபலிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 120/1c என்ற முகவரியில் எனக்கு ஒரு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை 1976 ஆம் ஆண்டு நான் வாங்கினேன். அந்த நிலம் வாங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1980 ஆம் ஆண்டில், ‘லேபர் வெல்ஃபேர் போர்ட்’ இந்த நிலத்தை கையகப்படுத்தி கொண்டது. இதன் ஒரிஜினல் பாத்திரம் என்னிடம் தான் இருக்கிறது.
தூக்கமில்லை.. மனவேதனையில் தவிக்கிறேன்.. தயவு செய்து நிலத்தை காப்பாத்தி மீட்டு கொடுங்க என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த நடிகை ஜெயசித்ரா கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்