தூத்துக்குடி கலெக்டா் இளம் பகவத் தலைமையில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்…!!
ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க
தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப் படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 293 கோரிக்கைமனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் இளம்பகவத் அறிவுறுத்தினர்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 24 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு லொரைட்டா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உலகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க
