
தூத்துக்குடி மாவட்டத்தில் லஞ்சத்தை ஒழிப்பது சாத்தியம்…..!! சீட்டா சேர்மன் ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு சிறப்பு திட்டம்…!! அக்கப்போர் நாளிதழ் , akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத்திலும் 100 வீட்டுக்கு ஒரு மாதிரி மக்கள் பாராளுமன்றம் என்ற அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைத்து அந்த 100 வீட்டில் மூன்று வீட்டுக்கு ஒருவர் வீதம் தேர்ந்து எடுத்து அந்த 33 நபர்கள் மூலம் மாதாந்திர கூட்டம் நடத்தி அரசு அதிகாரிகளின் லஞ்சத்தையும் நிர்வாக சீர்கேட்டையும், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்கு தீர்வு காணவும்,
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி மற்றும் போதைப்பொருள் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக 2029 ஆண்டுக்குள் மாற்றிக்காட்ட 100 வீட்டுக்கு ஒரு மாதிரி மக்கள் பாராளுமன்றம். அவ்வாறு 25 மாதிரி மக்கள் பாராளுமன்றத்திற்க்கு ஒரு பகுதி ஒருங்கிணைப்பாளர், அவ்வாறு 25 பகுதி ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு வட்ட ஒருங்கிணைப்பாளர் என ஆறு வட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு கோட்ட ஒருங்கிணைப்பாளர்.
என அமைத்து ஆறு மத பயற்சிக்கு பின் பகுதி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் மாதம் ரூ 5,000/- முதல் ஒரு வருடத்தில் ரூபாய் 12,500/- ஊக்க தொகை வழங்கப்படும். பத்து வருடத்துக்கு பின் மாத மாதம் வாழ்நாள் முழுவதும் ரூபாய் 10,000/- ஓய்வுதியம் வழங்கப்படும்.
வட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஆறுமாத பயற்சிக்கு பின் ரூபாய் 10,000/- முதல் ஒரு வருடத்தில் ரூபாய் 50,000/- வரை வழங்கப்படும். பின் 10 வருட பணிக்கு பின் மாதா மாதம் வாழ்நாள் முழுவதும் ரூபாய் 50,000/- ஓய்வுதியம் வழங்கப்படும்.
மேலும், கோட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஆறுமாத பயற்சிக்கு பின் மாதா மாதம் ரூபாய் 25,000/- முதல் ஒரு ஆண்டில் ரூபாய் 1,00,000/- வரை வழங்கப்படும். பின் 10 ஆண்டு பணிக்கு பின் மாதா மாதம் வாழ்நாள் முழுவதும் ரூபாய் 1,00,000/- ஓய்வுதியம் வழங்கப்படும்.
இந்த மாதிரி மக்கள் பாராளுமன்றத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளின் லஞ்ச ஊழலை ஒழிக்கவும், அரசு அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டை போக்கவும், போத்தைப்பொட்கள். இல்லாத தூத்துக்குடி மாவட்டமாகவும், கந்து வட்டி இல்லாத தூத்துக்குடி மாவட்டமாகவும், கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாவட்டமாகவும் தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கி காட்ட முடியும் என நான் உறுதி தருகிறேன்.
ஆறு மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 150 பகுதி ஒருங்கிணைப்பாளர் 6 வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒரு கோட்ட ஒருங்கிணைப்பாளர் என 157 பணியாளர்கள் மூலப் தூத்துக்குடி மாவட்டத்தில் துறைவாரியாக மாதந்தோறும் அதிகம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் சிறப்பு திட்டம் இடம் பெறும்.