ஒருங்கிணைந்தபெண்கள் மேம்பாட்டுத் திட்ட விழா…!! தலைமை செய்தியாளர் N.ரவிச்சந்திரன், மதுரை.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டுத் திட்ட விழா…!!

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

விருதுநகர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் துவக்க விழா . விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யில் ஸ்வஸ்தி நிறுவனம் மற்றும் ஒமேகா நிறுவனம், மேசவரம் விவசாய உற்பத்தி யாளர் நிறுவனம் சார்பாக ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டு திட்டம்
துவங்கப்பட்டது.


தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டு விருதுநகர் மாவட்டத்தில், மூன்றாண்டு காலத் திட்டத்திற்கான துவக்கவிழா இன்று, (25 பிப்ரவரி 2026) தொடங்கப்பட்டது. திருச்சுழியில் உள்ள ஸ்ரீ சித்தநாதர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு பிரிவான ஒமேகா ஃபோரம் ஃபார் சோஷியல் இம்பாக்ட் (OFSI) ஆதரவுடன், ஸ்வஸ்தி (Swasti – The Health Catalyst) நிறுவனம் “ஊரகப் பெண்களுக்கான சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை” அறிமுகப்படுத்தியது.


விருதுநகர் மாவட்டத்தின்
திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்பட்டு வரும் மேசவரம் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கிராமப்புறப் பெண்களுக்கான ஆரம்ப சுகாதார சேவை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளில் உள்ள இடைவெளிகளைச் சரிசெய்யும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்
கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரத் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்கள் எனப் பலதரப்பட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


இந்த விழா நிகழ்வை மேசவரம் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் செல்வம்
வரவேற்புரை வழங்கி துவக்கிவைத்தார். இவ்விழாவில் பேசிய ஒமேகா ஃபோரம் சி.இ.ஓ
சுனந்தா, இத்திட்டம் வெறும் சேவைகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், பெண்களிடம் நீடித்த தன்னம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.


திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய ஸ்வஸ்தி நிறுவனத்தின் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் பூபதி, தொடர்ச்சியான சுகாதாரக் கல்வி, மருத்துவ முகாம்கள், அரசு நலத்திட்டங்களுக்கான உதவி மையங்கள் குறித்து பேசினார்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkapore.news
Akkappore.com
/ Just CliCK now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top