


மனதை உலுக்கியது…!! தாயின் கடைசி நம்பிக்கை வரை மகனுக்காக ஒரு போராட்டம்…!! நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
மத்தியப் பிரதேசத்தில் நர்மதை ஆற்றின் பார்கி அணையில் சுற்றுலா பட்கு கவிழ்ந்த விபத்தில் ஒரே லைப் ஜாக்கெட்டில் தாய் தனது 4 வயது மகனை கட்டியணைத்தபடி கிடைத்த உடல்கள் காண்போர் மனதை உலுக்கியது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த சொகுசு படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
சுற்றுலாவுக்காக சுமார் 40 பேருடன் சென்ற அந்த படகு நடுநீரில் கவிழ்ந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான சிலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினர் படகின் இடிபாடுகளுக்கு இடையே சென்றபோது, டெல்லியைச் சேர்ந்த ஜூலியஸ் மெஸ்ஸி மற்றும் அவரது கைக்குழந்தை சியா மெஸ்ஸி ஆகியோரின் உடல்கள் ஒன்றாகக் கண்டெடுக்கப்பட்டன.

