முதல்வர் விஜய் மந்திரி சபையில், செய்தித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமனம்..!! வாழ்த்துகிறது அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஆளுநர் மாளிகை அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீட்டை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, முக்கியமான பல துறைகள் முதலமைச்சர் விஜய் வசமே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

விஜய்க்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்

உள்துறை, இந்திய ஆட்சிப்பணி தொடர்பான நிர்வாகம், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன், பெண்கள் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய துறைகள் முதலமைச்சர் விஜய்யின் நேரடி பொறுப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் விநியோகம் போன்ற மக்கள் நலத்துடன் நேரடியாக தொடர்புடைய துறைகளை முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்

அதோடு தவெக அரசில் பொறுப்பேற்றுக் கொண்ட 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் யாருக்கு என்ன இலாகா என்பதை தாண்டி, அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித் துறையும், தமிழ்வளர்ச்சி துறையும், செய்தித்துறையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாழ்த்துகிறது அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top