
மே 7 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்க தவெக தலைவர் விஜய் திட்டம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திக்.. திக்.. நிமிடங்கள்
தமிழக அரசியலின் திக் திக் நிமிடங்கள் தொடங்கியது; அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள், நகர்வுகளுக்கு தயாரானது தமிழக அரசியல் களம்
ஒருபுறம் ஆட்சி அமைப்பது குறித்து MLA-க்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் விஜய்; மறுபுறம் அமைச்சர் பதவி கிடைத்தால் ஆதரிக்கலாம் என ஆர்வத்துடன் இருக்கும் சிறிய கட்சிகள்.
அதிமுக 30 சட்டமன்ற உறுப்பினர்கள் SP வேலுமணி தலைமையில் TVK வில் விரைவில் இணைகிறார்கள் என்று தகவல்.
KA செங்கொட்டையன் & வேலுமணி பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக நடந்து முடிந்ததாகவும், 30 MLA களும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாகவும், விரைவில் விஜய் முடிவெடுப்பார் என தகவல்.
உறுதியான தகவல்கள் ஊடகத்தின் வாயிலாக அவர்கள் அறிவித்த பின்னரே உறுதியாகும்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு – கூட்டணி ஆட்சி அமைய தாமதமாகலாம் என்பதால் விஜய் முடிவு என தகவல்.
ஆலோசனை நிறைவு
வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுடன் சுமார் 3 மணிநேரம் ஆலோசனை நடத்திய தவெக தலைவர் விஜய். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில், பனையூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.
மே 7ஆம் தேதி விஜய் பதவியேற்பு விழா நடத்த முடிவு
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக தமிழக வெற்றி கழகம் திகழ்கிறது.
தமிழக ஆளுநரை நாளை சந்திக்க தேவை நேரம் கேட்கப்பட்டுள்ளது.
2 வாரங்களில் பெரும்பான்மை நிரூபிப்பதாக பொறுப்பு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
3 நாட்கள் சென்னையில் தங்கி இருக்க தவெக எம்எல்ஏக்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவி ஏற்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்.