வள்ளுவர் வழியில் குறட்பாக்கள் இயற்றிய “தாரகைக் குறள்” நூலாசிரியர் சுகந்தீனாவுக்கு பாராட்டு விழா….!! தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் களைகட்டிய கவுரவிப்பு நிகழ்ச்சி….! அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க.

வள்ளுவர் வழியில் குறட்பாக்கள் இயற்றிய “தாரகைக் குறள்” நூலாசிரியர் சுகந்தீனாவுக்கு பாராட்டு விழா….!! தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் களைகட்டிய கவுரவிப்பு நிகழ்ச்சி….! அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க.

கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் மகளிர் தின விழா… கொண்டாட்டம்…!!

உலகத் தமிழ்ப் பொதுமறை திர்க்குறள். இந்த நூலை படைத்த வள்ளுவர் எந்த காலந்திற்கும் பூமியில் எந்த பரப்பில், எந்த நாட்டில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும் வாழ்வியல், சமூகம், அரசியல், காதல், காமம் என பல்வேறு தலைப்புகளில் குறட்பா கருத்துகளை படைத்துள்ளார்.

வள்ளுவரையும் திருக்குறளையும் இக்காலம், எக்காலமும் என்று இல்லாமல் காலம் எல்லாம் கடத்தி கொண்டு செல்லும் இன்னொரு நூல் தான் தாரகைக்குறள். நச்சினிக்கினியார், பரிமேலழகர், மு.வரதராசனார், கலைஞர் கருணாநிதி என அறிஞர்கள் உரை தான் எழுதினார்கள்.

திருக்குறளையே அதன் சாயலில் படைக்கும் யோசனையோ, முயற்சியோ இவர்களே செய்ய பயந்து யோசித்தார்கள். ஆனால் அந்த பணியையும் படைப்பையும் கவிஞர் சுகந்தீனா அனாயசமாக செய்து சாதித்து இருக்கிறார்.

குறள் போன்ற சாயலில் புதிய வடிவம், வார்த்தைகள், காலத்திற்கு ஏற்ற மாற்று நல்வழி கருத்துகளை தாரகைக்குறள் நூலில் காண முடிகிறது.

214 அதிகாரங்கள் 2140 குறள் வெண்பா படைத்த தாரகைக் குறள் நூலாசிரியர் முத்தமிழ் தாரகை சுகந்தீனாவுக்கு திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில் உலகத் தாரகைத் தமிழ்ச் சங்க நிறுவநர், தலைவர் தாரகைக் குறள் நூலாசிரியர் முத்தமிழ் தாரகை சுகந்தீனாவுக்கும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவநர், தாமோதரன் உள்பட பலருக்கும் விருதுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது.

மேலும் மகளிர் தின விழாவில் சிறந்த மகளிர்க்கான பாராட்டும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து மற்றும் புதுவை தமிழ்ச் சங்க நிர்வாகிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பல்வேறு ஆளுமைகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Vedio link
Click Now / சொடுக்குங்க

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

இயற்கை அன்னையை காக்கும் அருகு அறக்கட்டளையும் அரும்புகளும்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top