
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now..Akkapore.news
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, ஒன்றியச்
செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கி,
ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கினார்.

முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பரந்தாமன், வி.எஸ். பாண்டியன், மலைச்சாமி, சசி, சரவணன்,ஜெயக்குமார், பாலாஜி, மூர்த்தி,பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை இணைச்
செயலாளர் மணிமாறன் வரவேற்றார். இதில், விராலிப்பட்டி பெரிய கருப்பன், கச்சைகட்டி பிச்சை, கோட்டைமேடு பாலன்உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ,
பொறியாளர் குரு பார்த்திபன் நன்றி கூறினார்.
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news
Akkappore.com
/ Just CliCK now
