வாழ்க்கையில் சாதனையாளராக மாணவர்களுக்கு 6 பண்புகள் அவசியம்…!! கோவையில் பாலத்துறை அரசு பள்ளியில் அருகு அறக்கட்டளை சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் அண்ணா பல்கலைக்கழக
முன்னாள் துணை வேந்தர்
பாலகுருசாமி பேச்சு…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

வாழ்க்கையில் சாதனையாளராக மாணவர்களுக்கு 6 பண்புகள் மிக அவசியம் என கோவையில் பாலத்துறை அரசு பள்ளியில் அருகு அறக்கட்டளை, மதுக்கரை அரசுமேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் இணைந்த மலரும் நினைவுகள் குழு, அக்கப்போர் நாளிதழ் சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவில்
அண்ணா பல்கலைக்கழக
முன்னாள் துணை வேந்தரும்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
முன்னாள் உறுப்பினருமான
உலகம் அறிந்த
கல்வியாளர், முனைவர்
பாலகுருசாமி அய்யா குறிப்பிட்டார்.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே பாலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயற்கை அன்னையை போற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபபிச்சை மெடோஸ் தலைமை வகித்தார். மலரும் நினைவுகள் அறக்கட்டளை பொருளாளர் எஸ்.வி.கணேசன், அருகு அறக்கட்டளை பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

பள்ளி ஆசிரியர்கள் மந்திரம் கணேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

அருகு அறக்கட்டளை நிறுவனர் – தலைவர் ஆர்.கே விக்கிரம பூபதி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். அப்போது 52 நூல்களை எழுதி, பல உயர்ந்த பொறுப்புகளை கல்வித்துறையில் வகித்து சேவையாற்றிய பாலகுருசாமி அய்யாவுக்கு பத்ம ஸ்ரீ, பாரத ரத்னா விருதுகளை மத்திய அரசு
வழங்க வேண்டும்; தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என அருகு அறக்கட்டளை சார்பில் வேண்டுகோள் வைத்தார்.

நிகழ்ச்சியில் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம்
(கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர்),
சிறப்பு அரசு வழக்கறிஞர்
சிவக்குமார்,
பாலத்துறை மின்சார வாரியம் உதவி மின்பொறியாளர் செந்தில்குமார்,
கல்வி டுடே, புதிய நாளிதழ், அக்னிப்புரட்சி செய்தியாளரும் அக்கப்போர் இணைய நாளிதழ் செய்தி ஆசிரியருமான நாகை நாகக்குடையான் நா.மணிவண்ணன் ஊடகத்துறையில் சாதிப்பது குறித்து பேசினார்.

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை – மணற்கேணி கோவை, ஈரோடு, நீலகிரி, மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து,
வழுக்குப்பாறை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருஞான சம்பந்தன்,
யூனியன் பப்ளிக் சர்வீஸ் தன்னார்வ பயிலும் வட்டம்
மற்றும் தொழில் முனைவோர் குழு ஒருங்கிணைப்பாளர்
ஜெயராமு,
ஜிஆர்டி கல்லூரி முதல்வர் நந்திவர்மன்,
சர்வதேச மனித உரிமைக்கழக தமிழ்நாடு செயலாளர், பத்திரிக்கையாளர் ரெமா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வழுக்குப்பாறை ரம்யா மகாலட்சுமி, உதவி பேராசிரியர் பாலத்துறை சுரேஷ்குமார், ஊடகவியலாளர்கள் ராதா ஸ்டுடியோ ஜான், சிராஜுதீன் பங்கேற்றனர்.

பள்ளி வளாகத்தில் 20 பூவரசம் மரக்கன்றுகள் நட்டு கம்பி வலை போட்டு அதில் தினமும் நீரூற்றி பராமரிக்கும் 20 மாணவ மாணவிகள் பெயர் பொறித்து, முதல் மரக்கன்றுகளை
சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலைக்கழக
முன்னாள் துணை வேந்தர் மற்றும்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன்னாள் உறுப்பினர் உலகம் அறிந்த
கல்வியாளர் முனைவர் பாலகுருசாமி அய்யா நட்டு, மாணவ- மாணவிகளை வாழ்த்தினார்.

தொடர்ந்து, விழாவில் அவருக்கு
‘அறம் பிறழாத முனைவர் பாலகுருசாமி அய்யா…!!
எழுஞாயிறு போல முகம் – நிலம்
தழுவாத நிமிர்ந்த நேர் பார்வை..!!
அறம் பிறழாத அய்யா பாலகுருசாமி – இறை
வரம் என்போம் இந்த மண்ணுக்கும்…தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறைக்கும்
… என அருகு அறக்கட்டளை சார்பில் வாழ்த்து கவிதை வாசித்து “வாழ்நாள் சாதனையாளர்” விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சாதனையாளர் ஆவது எப்படி? என்னும் தலைப்பில் பேசுகையில், “குக்கிராமத்தில் ஏழ்மையான சூழலில் பிறந்து வாழ்ந்து சிறிய அரசு பள்ளியில் போராடித்தான் சேர்ந்து படித்தேன். சிறிய வீட்டில் வசித்தோம். 15 கிலோ மீட்டர் சைக்கிளில் பள்ளிக்கு போனேன். கஷ்டப்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். நான் பள்ளியில் சேரும்போது சர்டிபிகேட் முக்கியமா? நாலெட்ஜ் முக்கியமா என வாத்தியாரையே கேள்வி கேட்டு சண்டை போட்டு தான் பள்ளியில் படிக்கும் வாய்ப்பையே பெற்றேன்.

மாணவ மாணவிகள் வாழ்க்கையில் உயரமும் உச்சமும் தொட 6 பண்புகள் அவசியம்.

வாழ்க்கையில் சாதனையாளராக நல்லா படிக்கணும். படிப்பு மட்டும் போதாது. 6 பண்புகள் மாணவர்களுக்கு வேண்டும்.
ஆர்வம் வேண்டும் திறமை, நேர்மை
கடின உழைப்பு வேண்டும்
தன்னம்பிக்கை வேண்டும்
தைரியம் வேண்டும். இந்த 6 பண்புகளில் முக்கியம் நேர்மையாக இருப்பது தான். இவைதான் மாணவர்களை எதிலும் ஜெயிக்க வைக்கும்” என குறிப்பிட்டார்.

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகளின் மலரும் நினைவுகள் குழு சார்பில் தினசரி, மாத காலண்டரை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வெளியிட்டு வாழ்த்தினார்.

இதையடுத்து மலரும் நினைவுகள் அறக்கட்டளை பொருளாளர் சீரபாளையம் எஸ்.வி.கணேசன்,
போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம்
(கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர்),
சிறப்பு அரசு வழக்கறிஞர்
சிவக்குமார்,
பாலத்துறை மின்சார வாரியம் உதவி மின்பொறியாளர் செந்தில்குமார், அருகு அறக்கட்டளை பொருளாளர் பச்சாபாளையம் செந்தில்குமார்,
அக்கப்போர் இணைய நாளிதழ் செய்தி ஆசிரியர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை – மணற்கேணி கோவை, ஈரோடு, நீலகிரி, மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து,
வழுக்குப்பாறை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருஞான சம்பந்தன்,
யூனியன் பப்ளிக் சர்வீஸ் தன்னார்வ பயிலும் வட்டம்
மற்றும் தொழில் முனைவோர் குழு ஒருங்கிணைப்பாளர்
ஜெயராமு,
ஜிஆர்டி கல்லூரி முதல்வர் நந்திவர்மன்,
சர்வதேச மனித உரிமைக்கழக தமிழ்நாடு செயலாளர்,
பத்திரிக்கையாளர் ரெமா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வழுக்குப்பாறை ரம்யா மகாலட்சுமி, உதவி பேராசிரியர் பாலத்துறை சுரேஷ்குமார், ஊடகவியலாளர்கள் ஜான், சிராஜுதீன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருதுகளை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வழங்கினார்.

தொடர்ந்து அருகு அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஆர்.கே.விக்கிரம பூபதி, பொருளாளர் செந்தில்குமார், ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
“விழாவுக்கு முறைப்படி அனுமதியும் ஆலோசனையும் வழங்கிய வட்டார கல்வி அலுவலர் மகேஷ்வரனுக்கும் நன்றி, பள்ளி தலைமையாசிரியர் ஜெபபிச்சை மெடோஸ்-க்கும் நன்றி, பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களை மதிக்கும் பழக்கத்தை 5 லட்சம் பேரிடம் கொண்டு செல்லவும் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொள்ளவும் அருகு அறக்கட்டளை தீவிரமாக களப் பணியாற்றும். கல்வி, மருத்துவ உதவி தேவைப்படும் ஏழ்மையில் இருப்போர், அருகு அறக்கட்டளையை எந்த நேரமும் அணுகலாம்” என தெரிவித்தனர். இதையடுத்து முன்னாள் மாணவ மாணவிகள் – அருகு அறக்கட்டளை இணைந்து மரக்கன்று நடும் விழாவை முன்னின்று ஏற்பாடு செய்ததற்காகவும் விழாவுக்கு முறைப்படி அனுமதியும் ஆலோசனையும் வழங்கிய வட்டார கல்வி அலுவலர் மகேஷ்வரனுக்கும் பள்ளி சார்பில் தலைமையாசிரியர் ஜெபபிச்சை மெடோஸ் மற்றும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

முடிவில் ஆசிரியர் மந்திரம் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)