இந்து நாளிதழ் – தமிழ்த் திசை இணையத்தில் “நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்” தலைப்பில் எழுதி வந்த எனது வாழ்க்கைப் பயண சுவடுகள்…!! தேர்தலுக்கு பிறகு மீண்டும் எழுதுவேன்…!! பிரபல வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இந்து நாளிதழின் தமிழ்த் திசை இணையத்தில் “நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்” என்கிற தலைப்பில் எழுதி வந்த எனது வாழ்க்கைப் பயண சுவடுகள் இதுவரை 100 தொடர்களாக நிறைவேறி உள்ளது!
1959 ல் தொடங்கிய அரசியல் பல்வேறு சந்திப்புகள் வடபுலத்து தலைவர்கள மற்றும் மாநிலத் தலைவர்களுடனான நட்புகள். முக்கியமான சம்பவங்கள் அதற்கான ஆதாரங்கள் பல்வேறு மாறுபட்ட காலச் சூழ்நிலைகள் தேர்தல் நேர முரண்பாடுகள் இணைப்புகள் போக பல்வேறு புதிய கட்சிகள் போன்றவற்றின் தொகுப்பு ஆவணமாகவும் அரசியல் களத்தின் சாட்சியாகவும் சட்டம் நீதி போன்றவற்றின் மீதான ஆலோசனைகளாகவும் கணிப்புகளாகவும் இந்தத் தொடர்கள் வரலாற்று தரவுகளுடன் வெளிவந்துள்ளன என்பதை வாசகர்கள் அறிவார்கள்! . இது குறித்து பலர் என்னை தொடர்பு கொண்டு கருத்துக்களை பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தற்சமயம் சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்குவதால் சற்றே அதை நிறுத்தி வைத்துத் தேர்தல் முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் மீண்டும் 101 இல் இருந்து தொடங்கலாம் என்று எண்ணத்தில் இருக்கிறேன். இந்து தமிழ்க் குழுமத்திலும் அதைச் சொல்லி இருக்கிறேன்.
காலம் அதற்கு என்ன பதில் சொல்கிறதோ பார்ப்போம். எனது தொடர்களை இதுவரை வாசித்து வந்தவர்களுக்கும் வாசிக்கப் போகிறவர்களுக்கும் எனது நன்றிகள்!!

கேஎஸ்ஆர் போஸ்ட்

ksrpost

24-2-2026,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top