நலம்பெற்று மீண்டு வருக தோழர் நல்லகண்ணு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நலம்பெற்று மீண்டு வருக தோழர் நல்லகண்ணு…!!

பெரும் மதக்கலவரத்துக்குப் பிறகு கோவையில் மக்களவைத் தேர்தல் நடக்கிறது.

தோழர் ஆர்.நல்லகண்ணு தி.மு.க.பா.க.ஜ. கூட்டணியின் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து நிற்கிறார். கூட்டணிக்கட்சிக் கொடிகள் கட்டிய வாகனம் பரப்புரைக்குச் செல்லத்தயாராக இருக்கிறது.

தோழர் வருகிறார், வாகனத்தில் முஸ்லீம் லீக் கொடி இல்லை, “அந்தக்கொடி எங்கே..” என்று கேட்கிறார்
“நாங்கதான் கொடியைக் கட்ட வேண்டாம்ன்னு சொன்னோம்..”- இது முஸ்லீம் லீக் கட்சியினரின் பதில்
-ஏன்
“இன்னைக்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில்தான் பிரச்சாரம்.. எங்க கொடி இருந்தா யாருக்காவது பிடிக்காம போலாம்.. அது உங்களுக் கிடைக்கற வாக்குகளைப் பாதிக்கும்.”
-உங்க கொடியில்லாம போனாத்தான் ஜெயிக்க முடியும்ன்னா அந்த வெற்றியெல்லாம் தேவையில்லை.. கொடியைக் கட்டுங்க, நீங்களும் வண்டில ஏறுங்க..” என்று சொல்லி அவர்களையும் அழைத்துக்கொண்டுதான் போனார் நல்லகண்ணு.

அந்தத் தேர்தலில் அவர் தோற்றார். ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவே இல்லை.
-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் உரையிலிருந்து. நலம்பெற்று மீண்டு வருக தோழர்

cpim #Cpimchidambaram #நல்லகண்ணு #CPIM

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top