உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை…!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் akkappore.news Just CliCK now

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் , மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், 125 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கக்கோரி அரசாணை வெளியிட்டும் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து,

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்

akkappore.news
Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed