

கங்கா அகடமி மலேசியா, தமிழ் பாரம்பரியக்கழக இயக்குநர் கங்கா தலைமையில் ஆட்டுக்கல், அம்மிக்கல்லில் அரைத்து சுவை மிகு தயாரிக்கும் சமையல் கலை பயிற்சி…!! சிறப்பு விருந்தினர் கோலலங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர் சேம்சன் பங்கேற்பு…!!
கங்கா அகடமி மலேசியா, தமிழ் பாரம்பரியக்கழகத்தை
வாழ்த்துகிறது அக்கப்போர் நாளிதழ்

கங்கா அகடமி மலேசியா, தமிழ் பாரம்பரியக்கழக இயக்குநர் கங்கா தலைமையில் ஆட்டுக்கல், அம்மிக்கல்லில் அரைத்து சுவை மிகு தயாரிக்கும் சமையல் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழர் பாரம்பரிய சமையல் கலையை காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சிக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் கோலலங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர் சேம்சன் பங்கேற்று துவக்கி வைத்து பெருமை சேர்த்தார். தெலுக் பங்லிமா காராங் வட்டாரத்தில்இயங்கி வரும்கங்கா அகடமி பெண்களுக்கான பல்வேறு வாழ்வியல் மேம்பாட்டுப் பயிற்சிகளை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அண்மையில் நம் இளைய தலைமுறை பெண்களுக்கான பாரம்பரிய சமையல் முறையை வலியுறுத்தும் வகையில் “ஆட்டுக் கல்லில் மாவு அரைக்கும் பயிற்சியையும் அம்மியில் தானிய வகைகள் அரைக்கும்” பயிற்சியையும் பாலாய் ராயா தாமன் ஜெயா, உத்தமா தெலுக் பங்லிமா, சிலாங்குர் காராங்கில் ஏற்பாடு செய்திருந்தது.கங்கா அகடமி மலேசியா, தமிழ் பாரம்பரியக்கழக இயக்குநர் கங்கா தலைமையில்ஏறத்தாழ முப்பது இடைநிலை பள்ளி மாணவர்கள், இருபது தாய்மார்கள் கலந்து கொண்ட பயிலரங்கை கோலலங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர் .சேம்சன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், தொழிநுட்ப துறையின் வளர்ச்சி காரணமாக பல்வேறு நவீன இயந்திரங்கள்
வந்து விட்டதால் நமது பாரம்பரிய முறைகள் மறக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பாரம்பரிய முறையைக் கடைப்பிடித்த நமது தாய்மார்கள் நல்ல ஆரோகியத்துடன் திடக்காத்திரத்துடனும் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அதோடு அக்காலத்தில் சமையல் சுவையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருந்ததாக மேலும் குறிப்பிட்டார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட பித்தாரா பாலர் பள்ளியின் தலைவர் ஆசிரியர் முனியாண்டி பேசுகையில், இந்நிகழ்ச்சி சுற்றுவட்டார பெண்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய குடும்ப மாதர்கள் நமது பாரம்பரிய முறைக்கு மீண்டும் திரும்ப இப்பட்டறை வழிகோலும் எனத் தாம் திடமாக நம்புவதாகக் குறிப்பிட்டார். தமிழ் பாரம்பரிய கழகச் செயலவை உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கா அகடமி மலேசியா, தமிழ் பாரம்பரியக்கழகத்தை
வாழ்த்துகிறது அக்கப்போர் நாளிதழ்





