
ஓம் சக்தி… பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி…!! – தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் அட்டாக் பேச்சு…!!
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு விவரம்:
“சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டை காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது.
இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
கிரிக்கெட்டில் CSK; தேர்தலில் TVK – விஜய்
தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சிஎஸ்கே; வரக்கூடிய தேர்தலில் விசிலை போடப்போவது டிவிகே.
டெல்லி அணி மட்டுமல்லா எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்நுழைய முடியாது. இது ஒரு அம்மா – பையன். அப்பா – மகன், அண்ணன் – தம்பி, அக்கா – தம்பி உறவு. இது மற்றவர்களுக்கு தான் எலக்சன் என்னையும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் எமோஷன்.”
விஜய் வாக்குறுதி: 2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் குடும்பத்தினர் படிப்புச் செலவை அரசே ஏற்கும்.
2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, ஒன்றிய அரசு ஊழியர்களாக இல்லாதபட்சத்தில் அவர்கள் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட – தொழிற்கல்வி முதல் அனைத்து வகை – படிப்புகளின் செலவையும் அரசே ஏற்கும்.
தவெக ஆட்சி அமைத்தால் 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை; அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும்-தவெக தலைவர் விஜய்.
தவெக ஆட்சி அமைந்தவுடன் உரத்தட்டுப்பாடு சரி செய்யப்படும், கூட்டுறவு பயிர் கடன் ரத்து செய்யப்படும்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக்கடனை 50% ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும்.
– தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு