செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / Akkappore.com. just click now
செய்தியாளர்கள் தேசம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு. பழனிச்சாமி…
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / Akkappore.com. just click now
மார்ச்,04, 2026
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், தேனியில் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஒரு நாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றது.
இந்த பயிலரங்கில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) திரு. வெ. பழனிச்சாமிஅவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், செய்தியாளர்கள் பரபரப்பு செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும் வகையில் ஊடகங்களும் செய்தியாளர்களும் ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், செய்திகளின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்த பின்னரே தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டும் என்றும், தற்போது சவாலாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரப்பப்படும் போலி செய்திகளைக் கண்டறிவதற்கான நவீனத் திறன்களை ஊடகவியலாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உதாரணமாக, பிரதமரின் யசஸ்வி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பயிலரங்கில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் திரு. பிரவீன் பாண்டி மோகன்தாஸ் புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து, நறுமணப் பொருட்கள் வாரியத்தின் உதவி இயக்குனர் திரு. செந்தில்குமரன், தேனி மாவட்ட ஏலக்காய் துறையை வலுப்படுத்துவது குறித்து உரையாற்றினார். மேலும், ஊடகத்துறை வல்லுநர் திரு. ஹபீப் ரகுமான், ஊடகத்துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உண்மை கண்டறியும் முறைகள் குறித்து பயிற்சிகளை வழங்கினார்.
முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு. பி. அருண் குமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக, மதுரை கள விளம்பர உதவியாளர் திரு. ஜெ. போஸ்வெல் ஆசிர் நன்றியுரை வழங்கினார். இந்த பயிலரங்கில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / Akkappore.com
just click now