

மனிதநேய தன் முனைப்பாற்றல் குழு சார்பில் பேக்கரும்பில் அப்துல் கலாம் 11-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news
மனிதநேய தன் முனைப்பாற்றல் குழு சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 11 – வது ஆண்டு நினைவு நாளில் 27 – 7- 2026 அன்று ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஹச். எம். டி நிறுவனர் மற்றும் இயக்குனர் முனைவர் சூ.லாரன்ஸ் தலைமை ஏற்றார்.
அப்துல் கலாம் ஐயாவின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பெ.பொன்ராஜ் கலந்து கொண்டு கலாம் ஐயாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி ஹச். எம். டி கொடியினை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் அவர்களுக்கு மனிதநேய தன்முனைப்பாற்றல் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து டி.டி.சாம்வேல் டேவிட், ஹச். வி. வைதீஸ்வரி, அய்யனார் , டி. சரவணன் உட்பட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நியமனச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்


