தேமுதிக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkapore.news Akkappore.com
/ Just CliCK now
உசிலம்பட்டி.

பிப்,20,2026
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கும் விதமாக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


தேமுதிக திமுக கூட்டணியில், இணைந்ததற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில்
இதன் ஒரு பகுதியாக ,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இதில்,
நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் ஒய்.எஸ்.டி.சமுத்திரபாண்டி மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்
Akkapore.news Akkappore.com
/ Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)