திருச்சி ஐஜி பங்களா எதிரே காதலியை துப்பட்டாவால் இறுக்கி காதலன் கொல்ல முயற்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

திருச்சி ஐஜி பங்களா எதிரே காதலியை துப்பட்டாவால் இறுக்கி காதலன் கொல்ல முயற்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சிவகங்கையை அடுத்த பரமக்குடி சாலக்குடி சேர்ந்தவர் அமலா வெர்ஜினா. முத்து விஜயாபுரத்தை சேர்ந்த வியாகுல நவீன்(23).

இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர்.

இருவரும் பேருந்தில் செல்லும்போது நட்பு காதலாக மாறி உள்ளது. பின்பு அமலா (23) வெர்ஜினா தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

சமீப காலமாக வியாகுல நவீனை சந்திப்பதில் அமலா மறுத்துள்ளார்.

மேலும் உன்னிடம் கார் இருக்கிறதா? இருசக்கர வாகனம் உள்ளதா?என்றெல்லாம் அவரிடம் கேட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 17.05.2026 திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஐஜி பங்களா எதிரே நடைபாதையில் உள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்து பேசும்போது மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

நவீன் அமலா வெர்ஜினாவை அவர் அணிந்து வந்த துப்பட்டாவை தன் கையால் கழுத்தை நெரித்து உள்ளார்.

மயக்கம் அடைந்த அமலா கீழே விழுந்து கிடந்துள்ளார். மீண்டும் அவருக்கு உயிர் இருக்கிறதாஎ ன்று பார்த்த நவீன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் முகத்தில் கொடூரமாக தாக்க துவங்கியுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை பிடிக்க முற்பட்டுள்ளனர்.

சத்தம் அதிகமானதால் ஐஜி பங்களாவில் இருந்த காவல்துறையினரும் ஓடி வந்து அவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உடனடியாக அமலாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நவீனை கேகே நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது.

பட்டப்பகலில் காதலித்த பெண் ஏமாற்றியதால் மனம் உடைந்த காதலன் கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top