

கர்நாடகா குடகு யானைகள் முகாமில் குளிப்பாட்டிய 2’யானைகள் சண்டை..!! காலில் சிக்கிய சென்னை பெண் ஜின்னு மரணம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கர்நாடக மாநிலம், Dubare Elephant Camp யானைகள் முகாமில் இன்று (மே 18) காலை ஏற்பட்ட துயரமான விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 33 வயதான பெண் சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
அவர் சென்னை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
யானைகள் குளிப்பாட்டு நிகழ்வை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, “கஞ்சன்” மற்றும்“மார்த்தாண்டா” என்ற இரண்டு பழக்கப்பட்ட யானைகள் திடீரென மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட பரபரப்பில், அருகில் இருந்த பெண் ஜின்னு யானையின் காலுக்கு கீழ் சிக்கி பலத்த காயமடைந்தார்.

இதை பார்த்த அவரது கணவர் ஜோயல், கைக்குழந்தையை மார்பில் அணைத்து கொண்டு மனைவி ஜின்னுவை காப்பாற்ற போராடிய நிலையில் ஜின்னு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு நடைமுறைகள், பார்வையாளர்கள் இடைவெளி மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது…அக்கப்போர் நாளிதழ் செய்திப்பிரிவு…!!

