
முன்னாள் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியல் ஓய்வு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
“அரசியலில் இருந்து ஓய்வு!” முன்னாள் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR) வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராக (MLA) இடைவிடாமல் பணியாற்றியுள்ளேன்.
தற்காலிக ஓய்வு: நேரம் மற்றும் கால அட்டவணை முழுவதையும் நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், அரசியலில் இருந்து சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
வெளிநாட்டுப் பயணம்:
அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
புத்தகப் பணி:
நான் எழுதி வரும் புத்தகப் பணிகளை இந்த ஓய்வுக் காலத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
உடல்நலன்: 60 வயதைக் கடந்த நிலையில், உடல்நலன் மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
மீண்டு வருதல்: பொதுச் சேவையில் எனது ஆர்வம் குறையவில்லை; புத்துணர்ச்சியுடன் மீண்டும் வருவேன்.
