
உழைப்பால் உயர்ந்த மாமனிதர் பாக்கெட் நாவல் ஆசிரியர் ஜி.அசோகன் அவர்கள்…!! கவிஞர், எழுத்தாளர் செங்கதிர் நிலவன், சேலம். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இன்று ஒரு முக்கியமான, உழைப்பால் உயர்ந்ந மாமனிதரைப் பற்றி கூற விரும்புகிறேன் .
பாக்கெட் நாவல் கிரைம் நாவல் ஆகியவற்றின் ஆசிரியர் திரு அசோகன் அவர்கள்.
நான் முதன் முதலில் பாக்கெட் நாவல் படித்தது 40 வருடங்களுக்கு முன்.
சுஜாதா எழுதிய தென்னம்பாளை என நினைக்கிறேன்.
அதன் பிறகு நிறைய படித்து இருக்கிறேன்.

அதேபோல் க்ரைம் நாவலில் படித்தது முதல் நாவலான நந்தினி 440 வோல்ட்ஸ்.
ராஜேஷ் குமார் தான் க்ரைம் நாவலில் முழுவதுமாக வருவார் .
மிக ஒரு நல்ல விதமாக அந்த காலகட்டத்தில் வந்து கொண்டிருந்தது.
நல்ல விற்பனை.
உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ராமராஜன் படம் நன்றாக ஓட ஆரம்பித்து ரஜினிகாந்த் கமலஹாசன் படங்கள் சற்றே வசூல் குறைந்தது போல பாக்கெட் நாவல் நன்றாக ஓட ஆரம்பித்து வார இதழ்கள் சற்று விற்பனை குறைந்தன.
அந்த அளவிற்கு மிக நன்றாக இதழ்களை கொண்டு சென்றார்.
மிக சுறுசுறுப்பானவர்.
அவருடைய தலையங்கம் மிக நன்றாக இருக்கும்.
ஒவ்வொரு புத்தகத்திலும் அந்த நாவல் பெறுவதற்காக அவர் பெரிய அவர் பட்ட சிரமங்கள் மற்றும் அது தொடர்பான நிறைய செய்திகளை கூறியிருப்பார்.
முக்கியமாக எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய பலா மரம் என்ற நாவலுக்கு அவர் பட்ட சிரமங்கள் மிக நன்றாக கூறியிருப்பார்
எழுத்து சித்தரிடம் நாவல் கேட்டிருக்கிறார்.
அவர் 100 பக்கத்தை அனுப்பி இருக்கிறார் .
இன்னும் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்
மறுபடி ஒரு 150 பக்கம் அனுப்பி இருக்கிறார்.
மறுபடியும் கேட்டிருக்கிறார்
மறுபடியும் 120 பக்கம் அனுப்பி இருக்கிறார்.
போதும் என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் எழுத்து சித்தர் மறுபடி ஒரு 140 பக்கம் அனுப்பி இருக்கிறார்.
பரவாயில்லை என்று சொல்லுகிறார்.
மறுபடியும் ஒரு 170 பக்கம் அனுப்பி இருக்கிறார் .
ஐயோ என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
மறுபடியும் ஒரு 80 பக்கம் எடுத்து சித்தர் அனுப்பி இருக்கிறார்.
அது அத்தனையும் அச்சு எடுத்து பிழை திருத்தம் பார்த்து சரிசெய்து அச்சுக்கு கொண்டு வருவதற்குள் ஜீயே பட்ட சிரமங்கள் மிக நன்றாக அதிலிருந்து தெரியவந்தது.
இன்னும் அதை என்னால் மறக்க முடியாது.
ஏனெனில் அந்த நாவலும் மிக நல்ல நாவல்.
அண்மையில் அவருடைய பிறந்தநாள் விழா பதிவையும் பார்த்தேன்
எழுத்து சித்தர் அவர்களுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்
மிக நன்றாக இருந்தது
தற்பொழுது 400 ஆவது இதழ் மற்றும் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாடுகிறார்
உண்மையிலேயே அந்த சுறுசுறுப்பை நினைத்து மிகவும் வியப்பு ஏற்படுகிறது
இரண்டு முறை அவரை பார்ப்பதற்காக திருவல்லிக்கேணி அலுவலகத்திற்கு 96, 97 வாக்கில் . சென்றிருந்தேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லைஅவசியம் அவரை ஒரு தடவை பார்க்க வேண்டும் ஐயா மிக நல்ல மனிதர்.
மிக நல்ல சுறுசுறுப்புடன் இருப்பது நிற்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது
பல்லாண்டு பல்லாண்டு அவர் வாழ்கை விட மனமார வாழ்த்துகிறேன்
கவிஞர், எழுத்தாளர் செங்கதிர் நிலவன்
சேலம்.



