ஆரணி வட்ட சமரச மையத்தின் சார்பில் 23.09.2026 ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆரணியில் காலை 9.15மணியளவில் சமரச மைய பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம்…!! அக்கப்போர் நாளிதழ் சொடுக்குங்க akkappore.news


மாண்பமை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் சென்னை மற்றும் மாண்பமை திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தின் வழிகாட்டுதல் படி ஆரணி வட்ட சமரச மையத்தின் சார்பில் 23.09.2026 ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆரணியில் காலை 9.15மணியளவில் சமரச மைய பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாண்பமை கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி.C.ஜெயஸ்ரீ, B.A.,B.L. அவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றி சமரச மையத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி.D.V. கோப்பெருந்தேவி ,B.Com,L.L.B(Hons) கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பார் அசோசியேஷன் தலைவர் திரு.V.வெங்கடேசன் மற்றும் திருமதி.கே.லதா, சென்ட்ரல் நாசர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், விரைவு வழி நீதிமன்றம், ஆரணி வரவேற்புரை வழங்கினார்கள்.
மூத்த வழக்கறிஞர் திரு கே.ராஜமூர்த்தி அவர்கள் சமரச தினத்தை பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.ஆரணி அரசினர் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சமரச மைய விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர். மாணவிகளுடன் அப்பள்ளியைச் சேர்ந்த திருமதி.பி.தாமரைச்செல்வி, தலைமை ஆசிரியர், அரசினர் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆரணி மற்றும் ஆசிரியைகள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் திரு.எஸ்.சியாம்சுந்தர்,திரு.எஸ்.பாலாஜி மற்றும் திரு.எம்.சங்கரன் ஆகியோர்களும் , துணைத் தலைவர் திரு.டி.திருஞானம், செயலாளர் திரு.சண்முகம், பொருளாளர் திரு.எஸ்.செந்தில் முன்னாள் தலைவர் திரு.எஸ். ஸ்ரீதரன் மற்றும் திரு.டி.பார்த்திபன் ஆகியோர்களும் மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக திரு.கே.சௌந்தர் இளநிலை உதவியாளர் வட்ட சமரச மையம் ஆரணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed