தூத்துக்குடி வரதராஜபுரத்தில் புதிய ரேசன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்…!!
தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டுக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
கீழ ரங்கநாதபுரம், மேல ரங்கநாதபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, வடக்கு ரத வீதி தொடர்ச்சி, வரதராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதனால் பயன்பெறுவர்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனா் தனலட்சுமி, வட்டச் செயலாளர் சக்திவேல், தொழிலதிபர் தெய்வநாயகம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சோமநாதன், முன்னாள் கவுன்சிலா் கந்தசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், பாக டிஜிட்டல் முகவர் மாரிமுத்து, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
