தொகுப்பூதிய பணியாளர்களின் வலியை கேட்காத பள்ளிக்கல்வித்துறை? அக்கப்போர் நாளிதழ் செய்தி ஆசிரியர் நா.மணிவண்ணன், Akkappore.news சொடுக்குங்க
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொகுப்பூதிய பணியாளர்கள், ஆண்டாண்டு காலமாக நிலையான பணி நியமனம், ஊதிய உயர்வு, சமூக பாதுகாப்பு போன்ற அடிப்படை கோரிக்கைகளுடன் போராடி வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்காக மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் உண்மையில் என்ன செய்துள்ளனர்? என்ற கேள்வி இன்று எழுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
மத்திய அரசின் நிதி கட்டுப்பாடுகளையே காரணமாக காட்டி, மாநில அரசு துறை அதிகாரிகள் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எத்தனை காலம்?
“மத்திய அரசுக்கு எதிராக ஏன் போராடவில்லை?” என்ற கேள்வி தொகுப்பூதிய பணியாளர்களிடம் கேட்டு எழுப்பப்படும் போது, அதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டிய கடமை மாநில திட்ட இயக்குநருக்கும், பள்ளிக்கல்வித்துறை செயலருக்கும் உண்டு.
ஆனால், அதற்கு மாறாக,
“எத்தனை முறை போராட்டம் நடத்தினீர்கள்?” என்ற கேள்வியுடன் தொகுப்பூதிய பணியாளர்களை அவமதிக்கும் போக்கு, ஒரு ஜனநாயக அரசின் நிர்வாகத்திற்கு அழகல்ல. போராட வேண்டிய சூழலை உருவாக்கியது யார்?
அவர்களை தெருவில் இறங்க வைத்த நிர்வாகத் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்?
மேலும் அதிர்ச்சி அளிப்பது, பள்ளிக்கல்வித்துறை செயலர் போன்ற உயரிய பதவியில் இருப்பவர், தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திக்க வரும் பணியாளர்களை கீழ்நிலை அலுவலர்களிடம் அனுப்பி விட்டு “ஓட்டம்” பிடிப்பது. இது நிர்வாக ஒழுங்கா? அல்லது அதிகாரத் திமிரா?
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் அடித்தளம். அந்த அடித்தளத்தை தாங்கி நிற்பவர்கள் இந்த தொகுப்பூதிய பணியாளர்கள்தான். அவர்களை புறக்கணித்து, அவமதித்து, கேள்வி கேட்டால் மௌனம் சாதிப்பது — கல்வித்துறையின் நேர்மையையும் மனிதநேயத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றால், அதற்காக மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டாமா?
அரசியல் ரீதியான போராட்டம் இல்லையெனில், குறைந்தபட்சம் நிர்வாக ரீதியான உறுதியான நடவடிக்கை கூட இல்லையா?அரசின் கொள்கை முடிவு என்று கூறி தப்பிப்பது.இதுதான் அதிகாரிகளின் ஆணவமே எதையுமே கண்டுகொள்ளாத தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
அப்பா என அழைக்கச்சொல்லி விளம்பரம் தேடும் மாடல் முதல் தேற்றும் முதல்வர் இன்று…சைக்கிள் ஓட்டும் கல்
தொகுப்பூதிய பணியாளர்கள் கேட்பது சலுகையல்ல;
மரியாதை, பாதுகாப்பு, நீதி.
அதை வழங்கத் தவறும் நிர்வாகம், நாளை கல்வித்துறையின் வீழ்ச்சிக்கும் பொறுப்பேற்க நேரிடும்.
போராடியவர்களை கேள்வி கேட்பது எளிது; ஆனால், அவர்களுக்காக போராடத் தவறியவர்களைக் கேள்வி கேட்பதே இன்றைய அவசியம்.
அக்கப்போர் நாளிதழ் செய்தி ஆசிரியர் நா.மணிவண்ணன், Akkappore.news சொடுக்குங்க
புதிய நாளிதழ் அக்னிப்புரட்சி SpotlightTamilnadu©️
