வாணாபுரம் புதூர் கிராமத்தில் 55 ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா…!! செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

வாணாபுரம் புதூர் கிராமத்தில் 55 ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், வாணாபுரம் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா.பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​முக்கிய விருந்தினர்கள் மற்றும் முன்னிலை
​ஊர் நாட்டார் கண்ணன் கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் த. நாராயணசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் தீபா அய்யனார்,மற்றும் மு.ஊராட்சி மன்றத் தலைவர் கோ.மணி ஆகியோர் முன்னிலை வகித்து விழாவினைச் சிறப்பித்தனர்.

​யாகசாலை பூஜைகள் S. கண்ணதாசன் ஐயர் மற்றும் S. சீனிவாசன் ஐயர் ஆகியோரின் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மாரியம்மன் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

​ஆலயப் புனரமைப்பு சிறப்பம்சங்கள்
​சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுமக்களின் பங்களிப்புடன் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

​சிற்ப வேலைப்பாடுகள்:
ஆனந்தன் ஸ்தபதி அவர்களின் கைவண்ணத்தில் உருவான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் ஆலயத்திற்குப் பொலிவூட்டியுள்ளன.
​பரிவார தெய்வங்கள்:
மாரியம்மன் ஆலயத்துடன் சேர்த்து,

அருள்மிகு விநாயகர், ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் ஆலயங்களும் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

​பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்,
​இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்களான பாவாடை கவுண்டர், சாரங்கபாணி கவுண்டர், வழக்கறிஞர் ரங்கநாதன், துணைத் தலைவர் வசந்தி ராஜா, கிருஷ்ணன், அய்யாசாமி, ஏழுமலை, காத்தவராயன், முனியன், முருகன், பழனிச்சாமி, கந்தசாமி, சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், ரவி, கோபாலகிருஷ்ணன்,முருகதாஸ், முனியப்பன், குழந்தைவேல், சேகர்,சக்திவேல், சேட்டு, ராஜி, குமார், முருகவேல், அய்யனார், சங்கர், தங்கராசு, சத்யராஜ் உள்ளிட்ட ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

​பக்தர்கள் வருகை
​சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தகோடிகளும், பொதுமக்களும் கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் சிறப்பான முறையில் அன்னதானமும், பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed