விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்….!!
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமானம் விபத்தில் உயிரிழப்பு தனி விமானத்தில் அஜித் பாவருடன் சென்ற 6 பேரும் உயிரிழந்தனர்
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார் (67),
மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரியாக 6 முறை பதவி வகித்தவர் ஆவார்.
மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார்.
சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார்.
அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மராட்டியத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது.
அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஎஸ்ஆர் நிறுவனத்திற்குச் சொந்தமான லியர்ஜெட் 45 ரக விமானம் (பதிவு எண் VT-SSK) செவ்வாய்க்கிழமை அன்று பாராமதி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகி தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில் பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் இருந்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், தலைமை விமானி மற்றும் துணை விமானி ஆகியோருடன், மேலும் இரண்டு பணியாளர்களான ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோருடன் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது
அவரது இழப்பு அவரது மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி. சுனேத்ரா பவார் அவர்களுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரிழப்பாகும்
ஆழ்ந்த இரங்கல்: மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
மும்பையிலிருந்து பாராமதிக்கு வந்த விமானத்தில் அஜித் பவார் அவர்கள் பயணித்த போது, பாராமதி விமான நிலையம் அருகே விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதால் அந்த விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது.
2024-ல் ஆறாவது முறையாக மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவரும், தற்போதைய துணை முதலமைச்சருமான அஜித் பவார் அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
பாராமதி தொகுதியில் இருந்து பலமுறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரத் பவாரின் சகோதரர் மகனான இவர், மகாராஷ்டிரா அரசில் நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில வளர்ச்சிக்கும், பாராமதி சட்டமன்ற தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர்.
அஜித் பவார் அவர்களின் இழப்பு அவரது மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி. சுனேத்ரா பவார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன் M.P
தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
