‘எனது வாழ்க்கையில் கவிப்பேரரசு வைரமுத்துவும்–கவி வேந்தர் மு.மேத்தாவும்’…!! – மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் ஆர்.கே.விக்கிரம பூபதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எனது வாழ்க்கையில் கவிப்பேரரசு வைரமுத்துவும்–கவி வேந்தர் மு.மேத்தாவும்…!! – மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் ஆர்.கே.விக்கிரம பூபதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எனது வாழ்க்கையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் – கவி வேந்தர் மு.மேத்தாவும்…!! மூத்த பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர் கோவை நாச்சிபாளையம் கவிஞர் ஆர்.கே.விக்கிரம பூபதி நினைவலைகள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரியில் தமிழ் மன்றத்தலைவராக பணியாற்றும் பெரும் பொறுப்பை அன்றைய முதல்வர், இன்றைய கல்வியாளர் – முனைவர் முத்துராஜ் அவர்கள் ஆர்.கே விக்கிரம பூபதி ஆகிய எனக்கு வழங்கி பெரும் உற்சாகமும் ஊக்கமும் அளித்தார்.

தமிழ் மன்றத் துவக்க விழாவிற்கு 1993-96 களில் கருத்தம்மா புகழ் பேராசிரியர் பெரியார் தாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது கல்லூரி மாணவர், பின்னாளில் திரைப்பட கவிஞர் வைரமுத்து குறித்து பேசினார்.

அந்த பேச்சின் சாராம்சத்தை “வைரமுத்து எதிர்காலம் கணித்த பெரியார் தாசன்” என்னும் தலைப்பிட்டு மாலைமுரசு கோவை பதிப்பில் கட்டுரையாக நான் எழுதியது 1-1-2000 ல் பிரசுரமானது.

பின்னாளில் கவிப்பேரரசு அவர்களை நேரில் சந்தித்து இதனை தெரிவித்து அவரிடம் கட்டுரை நகலை வழங்கினேன். “இன்னும் நிறைய எழுதுங்க” என கவிப்பேரரசு வைரமுத்து மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார்.

சிபிஎம் கல்லூரி தமிழ்மன்ற விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்தபோது வர முடியாத சூழலை விளக்கி கவி வேந்தர் மு.மேத்தா தனது கைப்பட 1993 – களில் எனக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அன்புடன்…..

மூத்த பத்திரிக்கையாளன், ஊடகவியலாளன் ஆர்.கே.(விக்கிரம) பூபதி M.A.Mphil.,
……………………………

உதவி ஆசிரியர்,
செய்திப்பிரிவு,

தினகரன் தமிழ் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top