திருச்செந்தூர் முருகன் கோயில் – கடல் 60 அடி உள் வாங்கியது…!! பக்தர்கள் அதிர்ச்சி..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது.

எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர்.

பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக கடலில் புனித நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

வழக்கமாக இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும்.

நேற்று முன்தினம் (ஏப். 30) இரவு முதல் நேற்று இரவு வரை பவுர்ணமி இருந்தது. இந்நிலையில் இன்று திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே கடல் நீரானது சுமார் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாசி படர்ந்த படி பச்சை நிறத்தில் பாறைகள் வெளியே தெரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top