19 – 03 – 2026

தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பாஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ! – தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் வேண்டுகோள் !

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு, பிரிண்டிங் மீடியாவுக்கு, ஒரு நிறுவனத்திற்கு ஒரு பாஸ் மட்டும் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மட்டும் நான்கு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்களை சேகரிப்பது என்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.

எதிர்காலத்தில், 234 தொகுதிகளுக்கும் ஒருவர் என தகவல் கூட வரலாம்.

ஒரு தொகுதிக்கு ஒரு செய்தியாளர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் என்ற அடிப்படையில் 468 நபர்கள் ஈடுபடலாம்.

ஆனால் மாவட்டத்திற்கு ஒருவர் என்றால் ?

ஏற்கனவே உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது !

தோழமையுடன்
டி.எஸ்.ஆர். சுபாஷ் !
மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed