
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now
எதிர்வரும் ஏப்ரல் 23,2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், அக்கரைப்பேட்டை மீனவர் துறைமுகத்தி விழிப்புணர்வு …..!!


02-04-2026 காலை 6 மணி முதல் 7 மணி வரை 100% வாக்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்றதற்கு இணையான முறையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி 100% வாக்கு குறித்து நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (DRO), மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் (JDFR) சர்மிளா, கடலோர காவல் படை DSP மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மீனவர்கள், மீனவப் பெண்கள், சிறு மற்றும் குறு மீன்வணிகர்கள், இளைஞர்கள்,
இளம் பெண்கள் தௌமற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, 100% வாக்குப்பதிவின் அவசியத்தை உணர்த்தினர்.

இந்நிகழ்ச்சி கண்காட்சி மற்றும் ரோடுஷோ வடிவில் ஒலிபெருக்கி வசதியுடன் நடைபெற்றது. விழிப்புணர்வு பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், பேனர்கள், போர்டுகள், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் மக்களிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாதவாறு பொறுப்புடன் செயல்படவும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த விழிப்புணர்வு பணியில் சமூக சேவை அமைப்புகள்,கல்வி நிறுவனங்கள்,
தன்னார்வ அமைப்புகள், அண்டர்காடு வசந்தா ஆசிரியர் மற்றும் கருப்பம்புலம் சித்திரவேலு (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now