நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சாத்தான்குளம் தூக்கு தண்டனை குற்றவாளிகளை காவல்துறை பதவியில் இருந்து நிரந்தர நீக்கம் (Dismiss) செய்ய மதுரை தென் மண்டல ஐ.ஜியிடம் பத்து ரூபாய் இயக்கம் நேரில் மனு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சாத்தான்குளம் தூக்கு தண்டனை குற்றவாளிகளை காவல்துறை பதவியில் இருந்து நிரந்தர நீக்கம் (Dismiss) செய்ய மதுரை தென் மண்டல ஐ.ஜியிடம் பத்து ரூபாய் இயக்கம் நேரில் மனு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மதுரை தென் மண்டல காவல்துறை தலைவ ஐ.ஜியை இன்று 17.04.2026 மாலை 04.00 மணியளவில் நேரில் சந்தித்து சாத்தான் குளம் குற்றவாளிகளை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளோம்

பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு மாநில செயலாளர் வழக்கறிஞர் க. சதீஷ்குமார், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. ரமேஷ் குமார் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முருகானந்தம் மனு அளித்தனர்.

மனு விபரம்

பெறுதல்
காவல் துறை தலைவர் அவர்கள்
தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம்
மதுரை

பொருள்: நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சாத்தான்குளம் தூக்கு தண்டனை குற்றவாளிகளை காவல்துறை பதவியில் இருந்து நிரந்தர நீக்கம் (Dismiss) செய்ய கோருதல் தொடர்பாக

அன்புடையீர் வணக்கம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவி தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாண்பமை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எஸ்சி எண் 470/2020 –ல் 23.03.2026-ல் குற்றவாளிகளுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. 06.04.2026-ல் இரட்டை தூக்கு தண்டனை அனைத்து குற்றவாளுக்கும் நீதிமன்றம் வழங்கி உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை நீதிமன்றத்தால் இரட்டை கொலைக் குற்றவாளிகள் என்று இரட்டை தூக்கு தண்டனை பெற்று உள்ளார்கள்.

நீதிமன்றத்தால் இரட்டை கொலைக் குற்றவாளிகள் என்று இரட்டை தூக்கு தண்டனை தற்போது இன்று வரையில் காவல் துறை பதவியில் இருப்பதும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த குற்றவாளிகள் இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் காவல் துறை பதவியில் தொடர்ந்து நீடித்து வருவதும் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது இவர்கள் காவல் துறை பதவியில் உள்ள ஒவ்வொரு நிமிடமும் கண்ணியமிக்க காவல் துறைக்கு அவமானமாகும்.

தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல் முறையீடு) விதிகள் மற்றும் இந்திய அரசியலைம்ப்பு சட்ட உறுப்பு 311 –ன் படி இந்த குற்றவாளிகளை காவல் துறை பதவியில் இருந்து நிரந்திர பணிநீக்கம் (Dismiss) செய்யப்பட வேண்டியவர்கள் ஆனால் தற்போது வரை இவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு சம்பளத்தில் 75% பிழைப்பூதியம் பெற்றுவருகின்றனர்

தூக்கு தண்டனை குற்றவாளிகளை உடனடியாக எவ்வித விசாரணையும் இல்லாமல் நிரந்திர பதவி நீக்கம் செய்ய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கு சட்டப்படியான அதிகாரம் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண்னை தாயின் கண்முன் பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களை காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த 27 ம் நாளில் நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

எனவே நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது காவல்துறை பதவியில் உள்ள இரட்டை கொலை குற்றவாளிகளை காவல் துறை பதவியில் இருந்து நிரந்திர பதவி நீக்கம் (Dismiss) செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

அனுப்புநர்:-
Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்
பொதுச் செயலளர்
பத்து ரூபாய் இயக்கம்
094456 75801

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top