புத்தகங்களை வழங்குங்கள்….!! DR.அம்பேத்கர் TNPSC – இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம்- 2026 அழைப்பு…!!
சென்னை பெரும்பாக்கம் 8 மாடியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏழை எளிய சாமானிய கூலி வேலை, கொத்தனார் வேலை வீட்டுவேலை செய்து குடும்ப சீவனம் செய்து வரும் சாமானியர்களின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் சுமோட்டோ சுகி என்று வேலை செய்து வருகிறார்கள்.*
இவர்களும் அரசுப்பணியை அலங்கரிக்க அரசாங்கத்தில் அரசு வேலை பெற கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி பிள்ளைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அரசை அனுகி TNPSC போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்கிற லட்ச்சிய நோக்கத்தோடு கடந்த டிசம்பர் -10, 2025 ல் Dr.B.R.அம்பேத்கர் TNPSC இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இங்கு படிக்க வருகின்ற பிள்ளைகள் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் நடத்துகின்ற பாடத்தை மட்டுமே படிப்பது என்பது போதாது.
ஆதலால் இவர்கள் பல்வேறு நூல்களை படித்து வெற்றிவாகை சூட வேண்டும் என்கிற நோக்கத்தில் நாங்கள் உங்களிடம் கையேந்துகிறோம்.
நீங்கள் உங்களிடம் இருக்கின்ற பழைய அல்லது புதிய அல்லது மனிதநேய அடிப்படையில் புதிய புத்தகம் வாங்கிக்கொடுத்தாலும் அதனை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஆதலால் எங்கள் பணி சிறக்க புத்தகங்கள் நேரடியாகவோ அல்லது தபாலிலோ நீங்கள் அனுப்பி வைக்க கீழ்கண்ட முகவரிக்கு போன் என்னுக்கு பேசி அனுப்பி வைக்க வேண்டுமாறு மிக்க பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு நூல்களையும் பயிற்சி மையத்தில் அமைய உள்ள புதிய மினி நூலகத்திற்கு பயன் படுத்துவோம்.
அது படிக்க வருகின்ற பிள்ளைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி..!!
புத்தகம் உங்களிடம் ஏதாவது இருப்பின் எங்களை தொடர்பு கொண்டால் நாங்கள் நேரிலே வந்து பெற்றுக் கொள்வோம்.
முகவரி:
சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன்
கண்ணகி நகர், துரைப்பாக்கம்
சென்னை. 97
செல். 96772 73082
