பெற்றோர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது…!!
கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை…!! K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

குமாரபாளையம் கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைவர் டாக்டர் விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்.

மாற்றுத் திறனாளியான தனது முதல் குழந்தையை அடிப்படையாகக் கொண்டு 2013இல் இந்த சிறப்பு திறன் பள்ளியை துவக்கியதாகவும், தற்போது 22 மாணவர்களுக்கு சிறப்பு கல்வி, தொழில் சிகிச்சை,உடற்பயிற்சி, பேச்சு பயிற்சி, இயற்கை மருத்துவம், யோகா, இசை பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

பள்ளி முதல்வர் டாக்டர் உமா மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்… குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களுக்கு ஆதரவாக பள்ளி செயல்பட்டு வருகிறது. தையல் கணினி பயிற்சிகள் வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார் .

தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் பேசும் போது, குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றவர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமையலறையில் பாதுகாப்பாக பணியாற்றும் முறைகள் குறித்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அரசு உளவியல் மருத்துவர்கள் டாக்டர் ஜெயபிரகாஷ் சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு குழந்தைக்கு தனித்திறன் கொண்டவை …பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒப்பிட்டு பேசக்கூடாது.

அரசு ஆண்டுதோறும் வழங்கும் இலவச மதிப்பீட்டு சேவையை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

யோகி கோபாலின் நகைச்சுவை மற்றும் சிரிப்பு பயிற்சி நடைபெற்றது. மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் மற்றவர்களை மகிழ்விப்பதில் சிரிப்பின் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார்.

விளையாட்டு கல்வி மற்றும் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

மேலும் ….

உண்மை செய்திகள …. உடனுககுடன் … ..உங்கள் உள்ளங்கையில்…

……………………………..

நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed