
யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் கமலா அம்மாள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. தனது மகன் சிறையில் வாடும் வேதனையில் மறைந்த அம்மாவின் இறப்பு மிகுந்த
அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வரும் நிலையில் தனது தாயார் மறைந்துள்ள நிலையில் கூட உடனிருக்க முடியாத சூழல் நிலவுகிறது.
உயிர் போகும் நிலையில் தனது மகனை நினைந்து நினைந்து அந்த தாய் கண்ணீர் விட்டு கதறியிருப்பார். அந்த தாயின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
மறைந்த கமலா அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தனது தாயை இழந்த நிலையில் தனிமைச் சிறையில் தவிக்கும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த வேதனையுடன்
பொங்கலூர் இரா. மணிகண்டன்