விவசாய கல்லூரி மாணவர்கள் கத்தரிப்புலம் கிராமத்தில் பயிற்சி கூட்டம்…!!
உதவி செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.com / just click now
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கிராமத்தில் வியாழக்கிழமை விவசாய பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
கத்தரிப்புலம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் காரைக்கால் பஜன் கோவா வேளாண் கல்லூரியின் இணை பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் நிரல் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். ஆனந்தகுமார் ஒருங்கிணைப்பில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாங்கன்று ஒட்டு கட்டுதல், வாழை கன்று விதை நேர்த்தி, உழவன் செயலி, ரசாயன உரங்கள் தெளிக்கும்போது பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்தும் விவசாயிகளுக்கு மாணவர்கள் அபினேஷ் விஷால் ஞானசுந்தர் ரஞ்சித் ரிஷிகுமார் ஆகியோர் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உதவி செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.com / just click now
