

ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் வசதி…!! வேட்பாளர் சீட்டா சேர்மன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு தூத்துக்குடி சட்டமன்ற மக்களுக்கு நூதன வாக்குறுதி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
தூத்துக்குடியில் ஊழலை விடவும் அரசியல் அதிகார ஆணவத்தின் உச்ச கட்டம் தாண்டவமாடுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மீது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை படி …
வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் தவறு செய்து உள்ளார்கள் என்று கூறும் அரசு ஏன் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள், அதற்கு காரணமானவர்கள், அதற்கு உத்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பதவி உயர்வு கொடுத்தது ஏன்! அதிமுக அரசும் அதைத்தான் செய்தது திமுக அரசும் அதைத்தான் செய்தது.
இந்த தேர்தல் முடிந்ததும் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தூப்பாக்கி சூடு நடந்ததின் மற்மம் வெளி வர வேண்டும்.
அந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊழல் இல்லாத தூத்துக்குடி சட்டமன்றத்தை மூன்று ஆண்டுகளில் உருவாக்குவேன், போதை இல்லாத தூத்துக்குடி சட்டமன்றத்தை ஒரு ஆண்டில் உருவாக்குவேன்,
கட்டப்பஞ்சாயது மற்றும் கந்து வட்டி இல்லாத தூத்துக்குடி சட்டமன்றத்தை இரண்டு வருடத்தில் உருவாக்குவேன், தூத்துக்குடி சட்டமன்றந்நில் நடத்தப்படும் அரசின் திட்ட பணிகள் அனைத்தும் லஞ்சம் இல்லாமல் ISO தர சான்றுடன் நடத்தப்படும். மேலும் தூத்துக்குடி சட்டமறத்தில் நிர்வாக சீர்கேடு இல்லாத சட்டமன்றமாகவும் தூத்துக்குடி சட்டமன்றத்தை உருவாக்க முடியும் மேலும் தூத்துக்குடியில் ஆம்புலைன்ஸ் ஹெலிகாப்டர் ஒரு ஆண்டில் கொண்டு வரப்படும் என தூத்துக்குடி சுயேச்சை வேட்பாளர் பாபு ப @ லஞ்ச ஒழிப்பு ப பாபு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

