செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
புதியநாளிதழ்,
அக்னிப்புரட்சி,
Akkappore.news /  just click now

உலக ஆரோக்கிய தினம்: வரலாறு, நோக்கம் மற்றும் விழிப்புணர்வு அவசியம்
ஏப்ரல் 7ஆம் தேதி உலகம் முtvழுவதும் “உலக ஆரோக்கிய தினம்” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. மனித வாழ்வில் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கும், அனைவருக்கும் சமமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்கும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
புதியநாளிதழ்,
அக்னிப்புரட்சி,
Akkappore.news /  just click now

1948ஆம் ஆண்டு  (WHO) நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், 1950ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக நாடுகளின் சுகாதார நிலையை மேம்படுத்தவும், பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தவும் WHO தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக ஆரோக்கிய தினத்திற்கான தனித்தீம் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் முக்கியமான சுகாதார பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மனநலம், சுற்றுச்சூழல் மாற்றம், அனைவருக்கும் சுகாதாரம் போன்றவை முக்கிய கருப்பொருள்களாக இருந்து வருகின்றன.


தற்போதைய சூழலில் இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நீண்டநாள் நோய்கள் அதிகரித்து வருகின்றன. மேலும்  போன்ற தொற்றுநோய்களும் உலகளவில் பெரிய சவாலாக அமைந்துள்ளன. இதனுடன் மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகையில், தினசரி உடற்பயிற்சி, சீரான உணவு, தடுப்பூசி மற்றும் நேர்மையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் பல நோய்களைத் தடுப்பது சாத்தியம் என தெரிவிக்கின்றனர். மேலும், புகை மற்றும் மதுபான பழக்கங்களை தவிர்ப்பதும் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
“ *ஆரோக்கியமே மிகப்பெரிய செல்வம்* ” என்ற கருத்தை முன்னிறுத்தும் உலக ஆரோக்கிய தினம், ஒவ்வொருவரும் தங்கள் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.உலக சுகாதார தினம் ஏப்ரல் 7
நமது நாகப்பட்டினம்  மாவட்டம்,நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை நாகூர் இல்
யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல வாழ்வியல்  மையம்   மார்ச் மாதம் 2026 முதல் தொடங்கப்பட்டு   யோகா மற்றும் இயற்கை மருத்துவ
நல்வாழ்வியல்  மாவட்ட  சித்த *மருத்துவ அலுவலர் மரு. R. கனிமொழி.* B. *S. M. S, MD(siddha)* *நாகப்பட்டினம் அவர்கள்*  நல்வழிகாட்டுதல் களுடன்  செயல் பட்டுவருகிறத்துசெயல் பட்டு வருகிறது. இயற்கை மருத்துவமனையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகள்,
இது குறித்து, மருத்துவமனை மருத்துவர் பேராசிரியர் கே.முத்துகிருஷ்ணன்,அவர்கள்  கூறியதாவது:
காலை 8:00 முதல் மாலை 2:00 மணி வரை, மேம்படுத்தப்பட்ட இப்பிரிவு செயல்படும்.
அரசு யோகா, உணவு முறை, நீர், மண்,  நறுமண எண்ணெய், நிறம், காந்தம் மற்றும் இயற்கை சிகிச்சைகள் முறையில் அளிக்கப்படும்.
காலை 8:00 முதல் 9:00 மணி வரை, நவீன யோகா பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும்.
மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, கழுத்து, முதுகு வலி, பக்கவாதம், சுவாசம், ஜீரண கோளாறுகள், சர்க்கரை நோய், பக்க விளைவு இல்லாத வகையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளது என்றும் *பேராசிரியர் மரு.K.முத்துக்கிருஷ்ணன்,. BNYS., MD,அவர்கள் தெரிவித்தார்* .


மருத்துவவர்கள் அனைவருக்கும் ஆரோக்கியதின நல்வாழ்த்துக்கள்.உடல்நலமே மிகச்சிறந்த செல்வம் அனைவருக்கும் வளம் நலம் வேண்டும்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
புதியநாளிதழ்,
அக்னிப்புரட்சி,
Akkappore.news /  just click now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed