நாகக்குடையான் – ஈரவாய்க்கால் சாலையில் ஆபத்தான நிலை வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உடனடி சீரமைப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கை*

என்ன கொடி பறக்குது நீண்டநாட்களாக…வேதாரண்யம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பார்வைக்கு

*நாகக்குடையான் – ஈரவாய்க்கால் *சாலையில் ஆபத்தான நிலை
நெடுஞ்சாலைத்துறை* உடனடி சீரமைப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கை*மார்ச்,10,2026
நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் வட்டம்,நாகக்குடையான் முதல் ஈரவாய்க்கால் செல்லும் சாலை இடையே தண்ணீர் இறைக்கப்பட்டதன் காரணமாக சாலையின் ஓரம் சேதமடைந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர ,பயணிகள் பேருந்து வாகனங்களுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சாலையின் ஓரத்தில் மண் சரிந்து குழி உருவாகியுள்ளதால் வாகனங்கள் சற்று கவனக்குறைவாக சென்றாலே கவிழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பகுதி மிகவும் அபாயகரமாக மாறி வருகிறது.


இந்த சாலையை தினமும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சாலை ஓரத்தை சீரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
📃📃📃📃செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், புதியநாளிதழ்அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now
நா.மணிவண்ணன் புதியநாளிதழ் அக்னிப்புரட்சி
மோட்டார்டுடே
Akkappore.News
SpotlightTamilnadu©️®️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top