நாகக்குடையான் நடுச்சாலை பகுதியில் காட்டு புள்ளிமான் நாய்கள் கடித்து குற்றுயிராக துடித்த சோகம்…!! சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை…!! அக்கப்போர் நாளிதழ் செய்தி ஆசிரியர் நா.மணிவண்ணன் akkappore.news சொடுக்குங்க

நாகை மாவட்ட. நாகக்குடையான் நடுச்சாலை பகுதியில் காட்டு புள்ளிமான் நாய்கள் கடித்து குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்கு போராடியது.

இந்த மான் படுகாயம் அடைந்து இறக்கும் நிலையில் உள்ளது குறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

10-03-2026 காலை 6.45 மணியளவில்
தகவல் தரப்பட்டது. இந்நிலையில் உயிரைக்காக்க வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு சம்பவ இடத்திற்கு வாகனத்தில் விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் மான் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

உயிரிழந்த மான் உடலை மீட்ட வனத்துறையினர் பிரத்யேக வாகனத்தில் எடுத்துச்சென்றனர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அக்கப்போர் நாளிதழ் செய்தி ஆசிரியர்
நா.மணிவண்ணன்

மற்றும்

புதியநாளிதழ், அக்னிப்புரட்சி Akkappore.news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed