
மலேசிய மண்ணில் தாய்த்தமிழில் உடல் மொழியோடு சரளமாக பேசி அசத்தும் சின்னஞ்சிறு சிறுமி துர்கா ஸ்ரீ – காணொலியுடன்….!! தலை வணங்கி வாழ்த்துகிறது…அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
மலேசியா, குல லங்காட், சிலாங்கூர்,
தெலுக் பங்லிமா காராங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் (6 அகத்தியர் ) படிக்கும் மாணவி துர்கா ஸ்ரீ செல்வமணி.
இந்த மாணவி சிறிய வயதிலேயே பேச்சு, கவிதை, நடனம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் கற்று தேர்ந்து, சாதனை படைத்து வருகிறார்.
அசாத்திய திறமையுடன் பேச்சாற்றல் கொண்ட துர்கா ஸ்ரீ, தனிச்சிறப்பு தான் பேசும் தமிழ் மொழி வார்த்தை, அர்த்தம், கருத்து, சிந்தனை வடிவத்தை உடல் அசைவிலும் கைகள் அசைவிலும் சேர்த்தே வெளிப்படுத்தும் பாங்கு எனலாம்.
இந்த மாதிரியான உடல் மொழியோடு தமிழ் மொழிப்புலமை வாய்ந்த புலமையை இந்திய தாயகத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் பெற்ற சிறுவர், சிறுமிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் மலேசிய தமிழ் அன்னை கலைமணி, செல்வமணி தம்பதிக்கு இளைய மகளாக பிறந்த சின்னஞ்சிறிய தமிழ்ச்சிறுமி துர்கா ஸ்ரீ – தனது தாயிடம் இருந்து பேச்சு, எழுத்து, கவிதை, பரதம் போன்ற அருங்கலைகளையும் நற்பண்புகளையும் பெற்று புகழ் உச்சியின் சிகரத்தை தொட்டு வருகிறார்.
மலேசிய மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்து வரும் துர்கா ஸ்ரீ தாய் கலைமணி தமிழ்நாட்டில் திருச்சி அருகே உள்ள கிராமத்தை பூர்வீகமாகவும் அங்குள்ள கோயில் சாமியை குல தெய்வமாகவும் கொண்டவர் என்பது ஆச்சரியப்படுத்தும் தகவல்…!!
என்னை தாலாட்டிய மொழி
என்னை சீராட்டிய மொழி
எனக்கு பாலூட்டிய மொழி…!!
என்னை வளர்த்தெடுத்த மொழி
நான் தோல்வி என்னும் கிணற்றில் விழுந்தபொழுது
எனக்கு கைகொடுத்த மொழி…!!
என் தாய் மொழி
என் தமிழ் மொழி
தமிழ்மொழி அவமானம் அல்ல… அடையாளம்…!!
அது என் உரிமையின் குரல்…
அது என் வாழ்க்கையின் நிலையான உறல்…..
என துர்கா ஸ்ரீ கலைமணி (6 அகத்தியர்,
தேசிய வகை தமிழ்ப்பள்ளி தெலுக் பங்லிமா காராங், குல லங்காட், சிலாங்கூர், மலேசியா) உரக்க உரைக்கும் தமிழின் இனிமையும் கம்பீரமும் எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்…எத்துனை நூற்றாண்டு இன்னும் கடந்து நின்றாலும்….!!
சின்னஞ்சிறிய பிள்ளை என்றாலும் தாய் மொழி தமிழ்ப்புலமையால் பெருமையுறும் துர்கா ஸ்ரீ இருக்கும் திசை நோக்கி …நக்கீரப் புலவன் தமிழ்த்திறம் கண்டு ஓடோடி வந்த பெருங்கடவுள் சிவனாய் …சிரம் வணங்கி…
வாழ்த்துகிறது…
“அக்கப்போர்” தமிழ் நாளிதழ்
ஒரு நாள் துர்கா ஸ்ரீ இருக்கும் இடத்திற்கே தேடிச்சென்று அக்கப்போர் நாளிதழ் தமிழுக்கு தகுந்த பரிசு தரும்….பாராட்டும் தரும்…!!
முதன்மை தலைமை செய்தி ஆசிரியர், ஆர்.கே.விக்கிரம பூபதி, M.Mphil.,
Watsup only
99443 28589
துர்கா ஸ்ரீ பேச்சு வீடியோ பார்க்க
சொடுக்குங்க / Click now




அருகு அறக்கட்டளை வாழ்த்து மடல்..



சமூகப் பணியில்….அருகு
