படைப்பாளர்கள் வாழும் போதே கொண்டாடப்பட வேண்டும்…!! D.S. கவி, BE., (senior engineer), பொதுச் செயலாளர்,உலகதாரகை தமிழ்ச்சங்க அறக்கட்டளை

படைப்பாளர்கள் வாழும் போதே கொண்டாடப்பட வேண்டும்…!! D.S. கவி, BE., (senior engineer), பொதுச் செயலாளர்,
உலகதாரகை தமிழ்ச்சங்க அறக்கட்டளை

உலகத் தாரகை தமிழ்ச்சங்க புலன குழு உறவுகளுக்கு பணிவான வணக்கங்கள்

படைப்பாளர்கள் வாழும் போதே கொண்டாடப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட இந்த தளத்தில் உங்களின் தனித்திறமைகள், சாதனை நிகழ்வுகள், படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு இவ்வாண்டு சங்க விழாவில் விருது வழங்கி கௌரவப் படுத்தப்படுவார்கள்.

எனவே… தமிழ், இயற்கை, இலக்கியம் சார்ந்த.. கவிதை, கதை, கட்டுரை, வரலாற்று பதிவுகள், ஆய்வு கட்டுரைகள் சம்பந்தமான தங்கள் சொந்த படைப்புகளையோ…
அல்லது ஏதாவது புத்தகம் எழுதி இருந்தால், அதை வெளியிடுவது சம்பந்தமான சந்தேகங்களையோ பதிவுகளையோ பதிவிடலாம்.

தளத்தில் பயணிக்கும் உறவுகள்
அகவை தினம்
இணையர் தினம்
கொண்டாடுவதற்கு முன்தினம் விரும்பினால் நிர்வாகிகளிடம் தனி எண்ணில் நினைவு கூர்ந்தீர்கள் எனில் சங்கம் சார்பாக தளத்தில் வாழ்த்து பதிவு போடப்பட்டு அனைத்து நல் உள்ளங்களின் வாழ்த்துகளையும் பெற வாய்ப்பாக இருக்கும்.

அரசியல் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை இந்த தமிழ் சார்ந்த… இயற்கை சார்ந்த… குழுவில் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

காலை வணக்க பதிவு இரவு வணக்க பதிவு இது போன்ற பதிவுகளையும் அறவே தவிர்த்திடுதல் நன்று.

புவி வாழ்வென்பது ஒருமுறை…
அதை அறம் சார்ந்து…
இயற்கையோடு இணைந்து…
தமிழோடு இயைந்து…
சமூகத்திற்கும்… வரும் தலைமுறையினருக்கும் பயனுள்ள செயல்களை செய்து கருணை உள்ளத்துடனும், ஒற்றுமையுடனும் பயணிப்போம்.

இவண்…
D.S. கவி, BE., (senior engineer)
பொதுச் செயலாளர்,
உலகதாரகை தமிழ்ச்சங்க அறக்கட்டளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top