நல்லோர் வட்டம் மாணிக்க மாணவர்கள் சந்திப்பு…!

நல்லோர் வட்டம் மாணிக்க மாணவர்கள் சந்திப்பு…!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் “நல்லோர் வட்டம்” அமைப்பின் சார்பில் சமூக அக்கறையாளர்கள் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி வேதாரண்யம் வட்டம் ,
அண்டர்காடு பாலசுப்பிரமணியன் தனலட்சுமி திருமண மண்டபத்தில் 17-05-2026 அன்று நடைபெற்றது., வேதாரண்யம் தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், நேர்மையான அரசு அதிகாரிகள், இயற்கை விவசாயிகள், வணிகர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இந்த அமைப்பில் உள்ளார்கள்.


சமூக முன்னேற்றம் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.பள்ளி மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து .
மாணிக்க மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.


தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தனித்தனியாக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த நேரடி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் சமூக ஒற்றுமை, மக்கள் நலன், இளைஞர் முன்னேற்றம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பொதுமக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top