ஏன் நாம் அனைவரும் இயற்கை மரணத்தை எதிர்க்கிறோம்…!? விளக்கம் தருகிறார், டாக்டர் மெஹர் நித்யன், சேலம். சுவாரசிய பதிவு தொடர் -1 அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஏன் நாம் அனைவரும் இயற்கை மரணத்தை எதிர்க்கிறோம்…!! விளக்கம் தருகிறார், டாக்டர் மெஹர் நித்யன், சேலம். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எப்படியும் தெரியும் நம் வாழ்க்கை குறிப்பிட்ட காலம்தான் என்று. ஆனாலும், உடலுக்கு என்ன வந்தாலும் ஒன்றும் ஆகாது என்று நம்மால் இருக்க முடியவில்லை.

ஒரு சிறு வலிகூட வரக்கூடாது, வந்த அடுத்த நொடி மருத்துவமனையில். எந்த மருத்துவமும் உயிரை தடுத்து நிறுத்தாது என்று தெரிந்தாலும் இயற்கை மரணத்திற்கு நாம் அனைவரும் எதிரிதான்.

மருத்துவமனை சென்று பணத்தையும் இழந்து உயிரையும் இழந்தால் அங்கே இருக்கும் நிம்மதி இயற்கை மரணத்தை ஏற்றுகொள்வதில் இருப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் வரும் மருத்துவ பய செய்திகள், சமூக வலைதள பதிவுகள், “இது ஆபத்து”, “அது ஆபத்து”, “இப்படி இருந்தால் உயிருக்கு ஆபத்து” என்ற தகவல்கள் மனிதர்களின் மனதில் ஒரு மறைபயத்தை உருவாக்குகின்றன.

மருத்துவம் கொடுக்கும் மன அழுத்தம் அதிகரிக்க காரணம் நமக்கான வாழ்க்கையின் மீது இருக்கும் ஆர்வம் குறையும் போது, ஏன் குறைகிறது என்றால் நம் குறிக்கோள்களில் கவனம் தப்பும்போது

நமக்கென்று ஒரு ஆசை, அதைநோக்கிய உரையாடல்கள் இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் மருத்துவ ஆலோசனைகள். அதெல்லாம் வேண்டாம், உடம்பை கவனி.

வயதாகிவிட்டது மருத்துவர் சொல்லிவிட்டார், rest தேவையாம் என்று சொல்லும் எத்தனையோ பேரை கடந்து செல்லும் போது மனதில் ஒரு வலி, அப்படி ஒன்று இல்லை, உங்களுக்கு பிடித்ததில் மனம் செலுத்தினால்தான் ஆரோக்கியம் என்று சொன்னாலும் மருத்துவத்தை ஆழமாக நம்ப வைத்ததால் எதையும் மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது

மனம் தான் முதல் மருந்து.
மனம் தான் முதல் பாதுகாப்பு.
மனம் தான் உடலின் முதல் குணப்படுத்தும் சக்தி.

இன்று பலர் நோயால் மட்டும் பாதிக்கப்படவில்லை…
பயம், பதட்டம், மனஅழுத்தம், அதிக சிந்தனை, உடல்நல அச்சம் ஆகியவற்றால் உடைந்து போகிறார்கள்.

மனம் அமைதியை இழந்தால்
உடலும் அழுத்தத்தை உணர ஆரம்பிக்கும்.

உங்கள் உடல் உங்கள் எதிரி அல்ல.
இயற்கை உங்களை கைவிடாது.
உடலுக்குள் இயற்கையாக குணப்படுத்தும் ஒரு அற்புத சக்தி இருக்கிறது.

மனம் அமைதியாக இருந்தால்:

  • தூக்கம் நன்றாக இருக்கும்
  • ஜீரணம் சீராகும்
  • உடல் சக்தி அதிகரிக்கும்
  • நோய் எதிர்ப்பு திறன் மேம்படும்
  • இதயம் அமைதியாக இயங்கும்
  • மூளை தெளிவாக செயல்படும்

மனஅழுத்தம் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
அமைதி நரம்பு மண்டலத்தை குணப்படுத்துகிறது.

மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. மருத்துவம் என்ன விலை உங்களிடம் வாங்கினாலும் , உயிர் இயற்கை சார்ந்தது. யாராலும் வாழ்நாள் கடந்து வாழ முடியாது. ஆனாலும் நம்மை உந்துகிறது மருத்துவம் சார்ந்த பதிவுகள். இறப்பு நிச்சயம் என்று தெரிந்துதான் மருத்துவ செலவை எதிர்கொள்கிறோம். அதில் ஒரு நிம்மதி நான் என்னை இயற்கை மரணத்தில் இருந்து காப்பாற்றிவிட்டேன் என்று.
ஆனால் பயந்து வாழ்வது வாழ்க்கை அல்ல.

அமைதியாக வாழுங்கள்.
இயற்கையை நம்புங்கள்.
உங்கள் மனதை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதிகப்படியான உடல்நல பயத்தை மூளைக்குள் அனுமதிக்காதீர்கள்.

மருத்துவம் மட்டும் ஆரோக்கியம் அல்ல.
மன அமைதியும் ஆரோக்கியம்.
உணர்ச்சி பாதுகாப்பும் ஆரோக்கியம்.
சந்தோஷமும் ஆரோக்கியம்.

மனம் பாதுகாப்பாக உணரும்போது
உடல் இயற்கையாக குணமடைய தொடங்கும்.

அமைதியான மனம்.
ஆரோக்கியமான உடல்.
அழகான வாழ்க்கை.

மருத்துவ பயத்தை எதிர்கொள்ள..

https://chat.whatsapp.com/HFCiRmb9KZyLYfgxZ6qVJA?mode=gi_t

Dr. Mehar Nithyan, PhD. (Psychology)
Director- Calmscious Psychotherapy Clinic
@9188384 28286

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top