இடைத்தரகர்களை நம்பி பணம் வழங்க வேண்டாம்
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி, கோபுராஜபுரம் மற்றும் நரிமணம் ஆகிய ஊராட்சிகளில் C.P.C.L. நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில், தகுதியான நில உரிமைதாரர்கள், குத்தகைத்தாரர்கள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு உரிய அரசாணையின் அடிப்படையில் மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற நிதியாக குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் (ஐந்து இலட்சம்)வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், சிலர் தங்களை இடைத்தரகர்கள் என கூறி பயனாளிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் மறுவாழ்வு நிதி குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ்,
இ.ஆ.ப.அவர்கள் செய்தித்தகவல் அறிவிப்பு
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி, கோபுராஜபுரம் மற்றும் நரிமணம் ஆகிய ஊராட்சிகளில் CPCL நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில், தகுதியான நில உரிமைதாரர்கள், குத்தகைத்தாரர்கள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு உரிய அரசாணையின் அடிப்படையில் மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற நிதியாக குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், சிலர் தங்களை இடைத்தரகர்கள் என கூறி பயனாளிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற நிதி முழுமையாக தகுதியின் அடிப்படையில் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க வழங்கப்பட்டு வருவதால், பயனாளிகள் யாரும் எவருக்கும் எந்தவித தொகையையும் வழங்கி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.ப. ஆகாஷ் ,இஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
19-05-2026 நாகப்பட்டினம்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now